நள்ளிரவில் இருசக்கர வாகனத்திற்கு தீ வைப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

நள்ளிரவில் இருசக்கர வாகனத்திற்கு தீ வைப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
X

சங்கரலிங்கபுரத்தில் நள்ளிரவில் மர்ம நபர்களால் இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தில் இரண்டு இருசக்கர வாகனத்திற்கு தீ வைப்பு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.

கோவில்பட்டி அருகே சங்கரலிங்க புரத்தில் நள்ளிரவில் இரண்டு இருசக்கர வாகனங்களை எரித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவில்பட்டி அருகே சங்கரலிங்கபுரம் வசித்து வருபவர் கருப்பசாமி மகன் பூல்பாண்டி. இவர் தீப்பெட்டி உற்பத்திக்கான மூலப்பொருள் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு தனது இரு சக்கர வாகனத்தை தனது வீட்டின் அருகில் நிறுத்தி விட்டு குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பெட்ரோல் வாடை வீச வெளியே வந்து போது பூல்பாண்டியின் வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் தீ பிடித்து எரிவதை கண்டு பூல்பாண்டியின் வீட்டின் கதவைத் தட்டி கருப்பசாமிக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைப் பார்த்த பூல்பாண்டி மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் சேர்ந்து வாளிகளில் தண்ணீரை நிரப்பி எரிந்து கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது ஊற்றி தீயை அணைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி காவல் கண்காணிப்பாளர் உதயசூரியன் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். நள்ளிரவில் இருசக்கர வாகனம் எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!