கோவில்பட்டி இரும்புக்கடையில் நடந்த திருட்டு வழக்கில் மேலும் 2 பேர் கைது

கோவில்பட்டி இரும்புக்கடையில் நடந்த திருட்டு வழக்கில் மேலும் 2 பேர் கைது
X
புதுக்கோட்டையை சேர்ந்த அஷ்ரப் அலி, கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த இம்ரான் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மனோஜ் மற்றும் அவரது நண்பர் கணேஷ்குமார் இருவரும் சேர்ந்து கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் அருகே இரும்புக்கம்பி கடை நடத்தி வருகின்றனர்.

இந்த கடையில் கடந்த ஜீலை மாதம் 10ந்தேதி6 பேர் கொண்ட கும்பல் கடையின் இரும்பு தகடுகளை பிரித்து சுமார் 1 லட்சத்தி 50 ஆயிரம் மதிப்புள்ள 2 டன் இரும்புக்கம்பிகள் மற்றும் 4 லட்ச ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை திருடி சென்றனர். இது குறித்து மேற்கு காவல் நிலையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து திருட்டில் ஈடுபட்ட புதுக்கோட்டையை சேர்ந்த முருகேசன், நல்லதம்பி, ராஜா, சரவணன் ஆகிய 4 பேரையும் கடந்த ஜீலை மாதம் 24ந் தேதி போலீசார் கைது செய்து 2லட்சத்து 25 ஆயிர ரூபாயை போலீசார் கைபற்றினர். மேலும் இந்த திருட்டில் தொடர்புடைய புதுக்கோட்டையை சேர்ந்த அஷ்ரப் அலி, கோபிசெட்டிபாளையத்தினை சேர்ந்த இம்ரான் ஆகியோரை போலீசார் தேடி வந்த நிலையில் தனிப்படையினர் இருவரையும் கைது செய்து 1லட்சத்து 50 ஆயிர ரூபாய் பணத்தினை பறிமுதல் செய்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்