கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு உயிரிழந்த பாம்புடன் வந்தவரால் பரபரப்பு

கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு உயிரிழந்த பாம்புடன் வந்தவரால் பரபரப்பு
X

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்  கடித்த பாம்புடன் வந்த நபரால் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டி அரசு மருத்துவமனைக்கு உயிரிழந்த பாம்புடன் வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவில்பட்டி அருகே உள்ள ஏழாயிரம்பண்ணை முத்தாண்டிபுரத்தைச் சேர்ந்த ஜெயபால் மகன் அஜித்குமார்(26).இவர் கட்டிட வேலை செய்து வருகிறார்.

அஜித் குமார் நேற்று இரவு வீட்டின் பின்புறமாக நடந்து சென்றபோது அவர் காலில் விஷமுள்ள கட்டுவிரியன் பாம்பு கடித்துள்ளது. வலி தாங்க முடியமால் அஜித்குமார் அலறியுள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த அவருடைய உறவினர்கள் விரைந்து வந்து பாம்பினை அடித்துள்ளனர். இதில் பாம்பு செத்துவிட்டது.

பின்னர் அஜித்குமாரை மீட்டு சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் கோவில்பட்டி அரசு மருத்துமவனையில் அனுமதித்தனர்.

இதற்கிடையில் அஜித்குமார் உறவினர் ஒருவர் உயிரிழந்த பாம்பினை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அஜித்குமாரை எந்த பாம்பு கடித்தது என்று காட்டுவதற்காக கையில் எடுத்து வந்ததாக அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்