உள்ளுரில் காய்கறி கொள்முதல் செய்யணும்- கோட்டாட்சியரிடம் மனு அளித்த காங்கிரஸார்

உள்ளுரில் காய்கறி கொள்முதல் செய்யணும்- கோட்டாட்சியரிடம் மனு அளித்த காங்கிரஸார்
X
உள்ளுர் விவசாயிகளிடம் காய்கறி கொள்முதல் செய்ய வலியுறுத்தி நூதன முறையில் மனு கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் மனு அளித்த காங்கிரஸ் கட்சியினர் அளித்தனர்.

உள்ளுர் விவசாயிகளிடம் காய்கறி கொள்முதல் செய்ய வலியுறுத்தி நூதன முறையில் மனு கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் மனு அளித்த காங்கிரஸ் கட்சியினர் அளித்தனர்.

விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகளை கொள்முதல் செய்யமால் வியாபாரிகள் புறக்கணித்து வெளியூரில் உள்ள மார்க்கெட்டில் கொள்முதல் செய்து வருவதாகவும், உள்ளுர் விவசாயிகளிடம் காய்கறி கொள் முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது விவசாயிகள் நேரிடையாக மக்களிடம் தாங்கள் விளைவித்த காய்கறிகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட துணை தலைவர் வழக்கறிஞர் அய்யலுச்சாமி, கயத்தார் ஒன்றிய தலைவர் செல்லத்துரை ஆகியோர் கழுத்தில் காய்கறி மாலை அணிந்து வந்து கோட்டாட்சியர் சங்கரநாரயணனிடம் மனு அளித்தனர்.


அந்த மனுவில் தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதில் எவ்வித சிரமும் இருக்க கூடாது என்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக காய்கறி, பலசரக்கு பொருள்கள் கிடைக்க வாகனங்கள் மூலமாக வீடுகளுக்கு சென்று விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது வரவேற்க்க கூடியது. அவ்வாறு விற்பனை செய்யப்படும் வாகனங்களுக்கு காய்கறிகள் விற்பனை செய்வதற்காக மொத்த காய்கறி வியாபாரிகள் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்திலும் மொத்த வியாபாரிகள் மூலமாக காய்கறிகள் வழங்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, கயத்தார், கடம்பூர்,கழுகுமலை, இளையரசனேந்தல்,எட்டயபுரம், விளாத்திகுளம், புதூர், பசுவந்தனை, ஓட்டப்பிடாரம் பகுதிகளில் அதிகளவில் தோட்டபயிர்களாக காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இந்த நிலையில் மொத்த வியாபாரிகள் மதுரை, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பகுதியில் இருந்து காய்கறிகளை கொள்முதல் செய்து விற்பனை செய்யும் நிலை இருப்பதால் உள்ளுர் விவசாயிகளிடம் காய்கறிகளை வாங்க மறுக்கும் சூழ்நிலை உள்ளது.

இதனால் பல விவசாயிகள் காய்கறிகளை பறிக்கமால் அப்படியே செடிகளில் விட்டு விடுகின்றனர். எனவே அரசு உள்ளுர் விவசாயிகளிடம் காய்கறிகளை கொள்முதல் செய்து உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனங்களுக்கு வழங்க வேண்டும் அல்லது விவசாயிகள் நேரிடையாக மக்களுக்கு காய்கறி விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும்,

அவ்வாறு செய்வது மூலம் மக்களுக்கு குறைவான விலையில் காய்கறிகள் கிடைப்பது மட்டுமின்றி விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும். கடந்த ஞாயிறு அன்று விவசாயிகளிடம் குறைவான விலைக்கு காய்கறிகளை கொள்முதல் செய்து பன்மடங்கு விற்பனை செய்தததை அனைத்து மக்களும் அறிவார்கள்.

எனவே அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு தோட்டக்கலை மற்றும் விவசாயத்துறை மூலமாக விவசாயிகளிடம் காய்கறிகளை கொள்முதல் செய்ய வேண்டும் அல்லது விவசாயிகள் மக்களிடம் நேரிடையாக காய்கறி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!