கோவில்பட்டி அருகே கார் கவிழ்ந்து கட்டிட ஒப்பந்தகாரர் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே கார் கவிழ்ந்து கட்டிட ஒப்பந்தகாரர் உயிரிழப்பு
X

தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த குருசாமி மகன் ஜெயக்குமார்(45). கட்டிட ஒப்பந்தகாரராக பணியாற்றி வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர்கள் உலகராஜ் மகன் அஜித்குமார்(25), குருசாமி மகன் செல்வம்(28). சுப்பையா(51). இவர்கள் 4 பேரும் இன்று காலை தூத்துக்குடியில் இருந்து பசுவந்தனை அருகே உள்ள கொப்பம்பட்டியை அடுத்த புதுப்பட்டியில் நடந்த நண்பர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் வந்தனர்.

பின்னர் மாலையில் இவர்கள் மீண்டும் காரில் ஊருக்கு புறப்பட்டனர். புதுப்பட்டியில் இருந்து கொப்பம்பட்டி செல்லும் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ஜெயக்குமார் உயிரிழந்தார். தகவல் அறிந்து, டி.எஸ்.பி.கலைக்கதிரவன் மற்றும் கொப்பம்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காயமடைந்த அஜித்குமார், செல்வம், சுப்பையா ஆகியோர் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். உயிரிழந்த ஜெயக்குமாரின் உடலை மீட்டு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கொப்பம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!