கயத்தாறு பகுதியில் 214 பேருக்கு ரூ. 68.51 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கயத்தாறு பகுதியில் 214 பேருக்கு ரூ. 68.51   லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
X

மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வழங்கினார்.

Tuticorin District People Relation Camp தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 214 பயனாளிகளுக்;கு ரூ. 68.51 லட்சம் மதிப்பிலான அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Tuticorin District People Relation Camp

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டம், குப்பணாபுரம் கிராமத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் 50 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், 14 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் மற்றும் உட்பிரிவுக்கான உத்தரவுகளையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் 76 பயனாளிகளுக்கு இ-பட்டாக்களையும், 5 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 28 பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 28 பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வழங்கினார்.

மேலும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் ஒரு பயனாளிக்கு தையல் இயந்திரத்தையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மூலம் 5 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு தனிநபர் கடன் உதவிகளையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு வேளாண் இடுபொருட்களையும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்நிறுவனங்கள் துறை மூலமாக 1 பயனாளிக்கு தொழில் தொடங்குவதற்கான கடன் உதவியும் என மொத்தம் 214 பயனாளிகளுக்;கு 68 லட்சத்து 51 ஆயிரத்து 461 ரூபாய் மதிப்பிலான அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வழங்கினார்.

முகாமின்போது, வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் போன்ற துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த திட்டவிளக்கக் கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி நேரில் சென்று பார்வையிட்டு, திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்கள்.

மேலும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் மூலம் நடைபெற்ற சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாமில் சர்க்கரை நோய் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. காய்ச்சல் மற்றும் சளி, இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு உரிய ஆலோசனை வழங்கப்பட்டது.

முகாமில் கயத்தாறு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மாணிக்கராஜா, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய், கயத்தாறு வட்டாட்சியர் நாகராஜன், குப்பணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் முத்துலட்சுமி வீரபாண்டியன், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சண்முகத்தாய் உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது