சாராயம் காய்ச்ச முயற்சித்த இருவர் கைது- மூலப்பொருட்கள் அழிப்பு

சாராயம் காய்ச்ச முயற்சித்த இருவர் கைது-  மூலப்பொருட்கள் அழிப்பு
X
தூத்துக்குடி மாவட்டம்-பழங்களை வைத்து ஊறல் தயார் செய்து, அதன் சாராயம் வடிப்பதற்கான முயற்சிகளை செய்த இருவர் கைது.

தூத்துக்குடி மாவட்டம், வடக்கு இலந்தைக்குளத்தில் சாராயம் விற்கப்படுவதாக கயத்தாறு காவல் நிலையத்திற்கு வந்த ரகசிய தகவலை தொடர்ந்து காவல் ஆய்வாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் பால் மற்றும் போலீசார் வடக்கு இலந்தைக்குளத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

ஊருக்கு வடக்கே உள்ள சின்னச்சாமி என்பவருடைய தோட்டத்தில் அதே ஊரைச் சேர்ந்த சண்முக சுந்தரம் மகன் வெயில்கனி (37) மற்றும் செல்லத்துரை மகன் காளிராஜ் (19) ஆகிய இருவரும் பழங்களை வைத்து ஊறல் தயார் செய்து, அதன் சாராயம் வடிப்பதற்கான முயற்சிகளை செய்து கொண்டிருப்பதை கண்டனர்.

உட னே அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடமிருந்து 25 லிட்டார் ஊறலை கைப்பற்றி அழித்தனர். மேலும் அதற்குரிய தளவாட சாமான்களை கைப்பற்றி அவர்கள் இருவரையும் கைது செய்து இது குறித்து கயத்தாறு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்