கோவில்பட்டி சுங்கச்சாவடி பணியாளர்களுக்கு காசநோய் கண்டறியும் முகாம்
கோவில்பட்டி அருகே சுங்கச்சாவடி பணியாளர்களுக்கு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.
கோவில்பட்டி அருகே சுங்கச்சாவடி பணியாளர்களுக்கு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் கடந்த சில மாதங்களாக காசநோய் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் தூத்துக்குடி மாவட்டப் பிரிவு மற்றும் கடம்பூர் காசநோய் பிரிவின் சார்பாக கயத்தாறு சுங்கச்சாவடி பணியாளர்களுக்கு காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சிக்கு சுங்கச்சாவடி நிலைய மேலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார்.
காசநோய் அறிகுறிகள் பரவும் தன்மை பற்றி தூத்துக்குடி மாவட்ட காசநோய் நலக்கல்வியாளர் முத்துக்குமார் பேசினார். மேலும், இந்த நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மாரிமுத்து பணியாளர்கள் தினசரி வாழ்வில் மேற்கொள்ளவேண்டிய பொது சுகாதார பற்றி தெளிவாக எடுத்துக் கூறினார்.
சுகாதார ஆய்வாளர் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலமாக காசநோய் கண்டறியும் முறை பற்றி பேசினார். பணியாளர்களின் சளி மாதிரிகள் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் நன்றி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் முதுநிலை ஆய்வுகூட மேற்பார்வையாளர் தனசெல்வி சோபியா , சுகாதார பார்வையாளர் திவ்யா , இடைநிலை சுகாதார பணியாளர் சரண்யா மற்றும் நுண்கதிர் வீச்சாளர் எட்டையா ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu