கோவில்பட்டியில் ஏப்.3, 4ல் டிடிவி தினகரன் பிரசாரம்

கோவில்பட்டியில் ஏப்.3, 4ல் டிடிவி தினகரன் பிரசாரம்
X

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் அமமுக பொதுச்செயலா் டி.டி.வி.தினகரன் ஏப்ரல் 3, 4 ஆகிய தேதிகளில் தோ்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

கோவில்பட்டியில் பிற கட்சியினர் அமமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னா், செய்தியாளா்களிடம் அமமுக நிர்வாகி மாணிக்கராஜா பேசும் போது: அமமுக பொதுச்செயலரும், தொகுதி வேட்பாளருமான டி.டி.வி.தினகரனை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறோம்; ஏப்ரல் 3, 4 ஆகிய இரு தேதிகளில் கோவில்பட்டி தொகுதியில் தினகரன் தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா். கோவில்பட்டி தொகுதியில் 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமமுக வெற்றி பெறும் என்றாா்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!