கோவில்பட்டி வாக்கு எண்ணும் மையத்தில் மூன்று அடுக்கு பாதுகாப்பு

கோவில்பட்டி வாக்கு எண்ணும் மையத்தில் மூன்று அடுக்கு பாதுகாப்பு
X

கோவில்பட்டி வாக்கு எண்ணும் மையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவில்பட்டி வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்புடன் துப்பாக்கி ஏந்திய போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கோவில்பட்டி வாக்கு எண்ணும் மையத்தில் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் 36 வார்டுகளுக்கு வரும் 19ம்தேதி தேர்தல் நடைபெற்றது திமுக, அதிமுக, பாஜ, காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளின் வேட்பாளர்கள் என 227 பேர் களத்தில் உள்ளனர். இதையொட்டி வாக்கு எண்ணும் மையத்தில் ஒரு சுற்றில் 12 வார்டுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 3 சுற்றுக்கு 36 வார்டுகளும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. மையத்தில் அமைக்கப்பட்டு அனைத்து வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

தேர்தல் அதிகாரி மற்றும் ஆணையர் ராஜாராம் தலைமையில் உதவி தேர்தல் அதிகாரிகளாக ரமேஷ்,மணிகண்டன், பிரதானபாபு,நாராயணன் முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்‌. கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வைத்து வரும் 22ம்தேதி எண்ணப்படுகின்றன. இதையொட்டி வாக்கு எண்ணும் மையத்தின் முன்பகுதியில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் செல்வதற்கு வசதியாக கம்புகள் கட்டும் பணி நடந்து வருகின்றன. இவை தவிர வாக்கு எண்ணும் மையத்திற்குள்ளும் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஆயுதப்படை போலீசார் மற்றும் கோவில்பட்டி சரக போலீசார் மற்றும் வெடிகுண்டு பரிசோதனை உதவி ஆய்வாளர் சுகுமார், மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நாககுமாரி, உதவி ஆய்வாளர் பரமசிவம், மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இதில் ‌தீயணைப்புத்துறை நிலை அதிகாரி அருள்ராஜ் தலைமையில் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ‌

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!