கோவில்பட்டியில் நூலக உறுப்பினர் களாக இணைந்த 1000 அரசுப் பள்ளி மாணவிகள்

கோவில்பட்டியில் நூலக உறுப்பினர் களாக இணைந்த 1000 அரசுப் பள்ளி மாணவிகள்
X

கோவில்பட்டியில் மாணவிகளுக்கு மருத்துவர் கமலா மாரியம்மாள் நூலக உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.

தேசிய நூலகர் தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஆயிரம் பேர் இணைந்தனர்

தேசிய நூலகர் தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நூலக உறுப்பினராக 1000 மாணவிகள் தங்களை இணைத்து கொண்டு செல்போன் பயன்பாட்டை குறைத்து பள்ளி பாட புத்தகத்தோடு நூலகப் புத்தகத்தையும் வாசிப்பு பழக்கத்தை மேற்கொள்ள உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

நாடு முழுவதும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி இந்திய நூலக தந்தை எஸ்.ஆர். அரங்கநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு, தேசிய நூலகர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 1000 மாணவிகள் கோவில்பட்டி அரசு கிளை நூலகத்தில் நூலக உறுப்பினராக தங்களை இணைத்துக் கொண்டனர்.

மேலும், செல்போன் பயன்பாட்டை குறைத்து பள்ளி பாட புத்தகத்தோடு நூலக புத்தகத்தையும் வாசித்து பொது அறிவை வளர்த்து விரும்பும் துறைகளில் சாதனை புரியவும், வாசிப்பு பழக்கம் குறித்து அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தொடர்ந்து, அனைவருக்கும் நூலக உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டது. 1000 நூலக உறுப்பினருக்கான கட்டணத் தொகை முப்பதாயிரத்தை சுவிட்சர்லாந்து சங்கமம் தொண்டு நிறுவனம் நூலகத்துறைக்கு வழங்கியது. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை ஜெயலலிதா தலைமை வகித்தார்.

உதவி தலைமை ஆசிரியை உஷா ஷோஸ்பின் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் ஆசிரியை கெங்கம்மாள் அனைவரையும் வரவேற்றார். பள்ளியின் பழைய மாணவியும் மருத்துவருமான கமலா மாரியம்மாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நூலக உறுப்பினர் அட்டைகளை மாணவிகளிடம் வழங்கினார். இதில் உதவி தலைமை ஆசிரியர்கள் கண்ணன், சீனிவாசன் உள்பட ஆசிரியர்கள், மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அறிவியல் ஆசிரியர் பிரவீன் நன்றி கூறினார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!