கோவில்பட்டியில் 11 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி கைது

கோவில்பட்டியில் 11 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி கைது
X
11 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

கோவில்பட்டியில் கொலை மற்றும் கொலை முயற்சி உட்பட 11 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவுப்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் மேற்பார்வையில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது கோவில்பட்டி பாரதிநகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த கோவில்பட்டி பாரதி நகரைச் சேர்ந்த முருகன் மகன் சூர்யா (21) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் அந்த பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து தகராறு செய்து கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

உடனே மேற்படி போலீசார் அவரை கைது செய்தனர். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட சூர்யா மீது கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட 3 வழக்குகளும், கிழக்கு காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி உட்பட 5 வழக்குகளும், கழுகுமலை காவல் நிலையத்தில் 2 வழிப்பறி வழக்குகளும், திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும் என மொத்தம் 11 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!