கோவில்பட்டியில் விதிமுறைகளை மீறிய டீ கடைகள் மீது போலீசார் நடவடிக்கை
கோவில்பட்டி பகுதியில் கடந்த சில தினங்களாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி அதிகளவில் டீ கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சமூக இடைவெளி இல்லமால், பலர் முககவசம் அணியமாலும் இருந்து நீண்ட நேரம் டீ கடைகளில் இருப்பது தெரியவந்தது.
ஏற்கனவே கோவில்பட்டி பகுதியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வகையில் டீகடைகளில் மக்கள் கூட்டம் இருப்பதை கட்டுப்படுத்த வேண்டும் என்று பலதரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில் இன்று கோவில்பட்டி டி.எஸ்.பி. கலைக்கதிரவன் தலைமையிலான போலீசார் சாதரண உடையில் டீகடைகளுக்கு சென்று சோதனை நடத்தி விதிகளை மீறி அதிகமான மக்கள் கூட்டத்துடன் டீ விற்பனை செய்த கடைகளுக்கு அபாரதம் விதித்து நடவடிக்கை எடுத்தனஇதையெடுத்து கோவில்பட்டி நகரில் பெரும்பாலான டீ கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் வியாபாரிகள் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும், இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu