உடுக்கை இசைக்கலைஞரின் விடாமுயற்சி; 10 ஆண்டுகளுக்கு பிறகு தீர்வு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள மேலக்கரந்தை கிராமத்தினை சேர்ந்த உடுக்கை இசைக்கலைஞர் குருசாமி.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள மேலக்கரந்தை கிராமத்தினை சேர்ந்தவர் குருசாமி. இவர் வில்லிசையில் உடுக்கை வாசிக்கும் கலைஞர். சுமார் 45 ஆண்டுகளுக்கு மேலாக உடுக்கை வசித்து வந்தார். தமிழகம் முழுவதும் உடுக்கை வாசித்துள்ள குருசாமி மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் முன்னிலையிலும் வாசித்து பாராட்டு பெற்றுள்ளார்.
பல்வேறு அமைப்புகளிடம் இருந்து பல்வேறு விருதுகள், பாராட்டு சான்றிதழ்களும் பெற்றுள்ளார். தமிழக அரசின் கலைஞர்களுக்கான அடையாள அட்டையும் குருசாமி பெற்றுள்ளார். 80 வயதிற்குமேல் ஆவதாலும், கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில் திருவிழாக்கள் இல்லை என்பதால் நிகழ்ச்சிகள் நடக்கவில்லை என்பதால் கடந்த 2 ஆண்டுகளாக எங்கும் செல்லமால் உள்ளார்.
நிகழ்ச்சிகள் இல்லை என்பதால் போதிய வருமானம் இல்லமால் விவசாய வேலைக்கு செல்வது, நுங்கு விற்பது போன்ற வேலைகளை செய்து அதில் கிடைக்கும் வருவமானத்தில் தனது இறுதி காலத்தினை குருசாமி கழித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நலிந்த கலைஞர்களுக்கான உதவி தொகை கேட்டு குருசாமி விண்ணப்பம் செய்துள்ளனர்.
ஆனால் தற்பொழுது வரை அவருக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை, பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை இல்லை என்பதால் வேறு வழி இல்லமால் தள்ளாத வயதிலும் குருசாமி நுங்கு விற்பனை செய்து வந்தார். நுங்கு சீசனும் தற்பொழுது முடிந்து விட்டது.
விவசாய வேலையும் இல்லை, குடும்பத்தினர் அரவணைப்பும் இல்லை என்ற சூழ்நிலையில் ரேஷனில் கொடுக்கும் அரிசியை வைத்து தனது வாழ்நாட்களை கழித்து வருகிறார். மற்றவர்கள் மன மகிழ உடுக்கை வாசித்த கலைஞர் தனது இறுதி நாள்களை கடும் வறுமையில் கழித்து வரும் சூழ்நிலை உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜிடம் கேட்ட போது, உடுக்கை கலைஞர் குருசாமியின் மனு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், நலிந்த கலைஞர்களுக்கான ரூ.3000 உதவி தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் உடனடியாக அவருக்கு உதவி கிடைக்கும் வகையில் முதியோர் உதவி தொகையாக ரூ.1500 கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் திங்கள்கிழமை அதற்கான ஆணை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu