கோவில்பட்டியில் ஆசிரியர்களுக்கு கிரீடம் அணிவித்து மாணவிகள் மரியாதை

கோவில்பட்டியில் ஆசிரியர்களுக்கு கிரீடம் அணிவித்து மாணவிகள் மரியாதை
X

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கு கிரீடம் அணிவித்து மாணவிகள் மரியாதை செய்தனர்.

கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஆசிரியர் தின விழாவில் ஆசிரியர்களுக்கு கிரீடம் அணிவித்து மாணவிகள் மரியாதை செய்தனர்.

டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய நாளில் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கு மாணவ, மாணவிகள் மரியாதை செலுத்துவது உண்டு. அதன்படி, நாடு முழுவதும் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் வித்தியாசமான முறையில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா கொண்டாடபப்பட்டது. அப்போது, மாணவிகள் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனார், டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். பின்னர் பள்ளி ஆசிரியர்களுக்கு கிரீடம் அணிவித்து மரியாதை செய்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேஷ் தலைமை வகித்தார்.ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் முத்துசெல்வம், செயலாளர் சரவணன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் முத்து முருகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியை ஜெயலதா அனைவரையும் வரவேற்றார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் முத்தையா பிள்ளை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆசிரியர் தின சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்ட பொதுச் செயலாளர் ஆறுமுக பெருமாள், ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர்கள் சீனிவாசன், ஆசியா பார்ம்ஸ்பாபு, நாராயணசாமி, பாபு, ரோட்டரி சங்க இணை செயலாளர் ராஜமாணிக்கம், வீராச்சாமி, மாரியப்பன், பூல்பாண்டி, பழனிக்குமார் உள்பட ஆசிரியர்கள், மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் இசை ஆசிரியை அமல புஷ்பம் நன்றி கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!