கோவில்பட்டியில் மாநில யோகாசன போட்டி; மாணவ, மாணவிகள் பங்கேற்பு
மாநில அளவிலான யோகாசன போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பரிசு வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தமிழ் கல்ச்சுரல் மற்றும் யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் சார்பில் எட்டாம் ஆண்டு மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான யோகாசன போட்டிகள் எஸ்எஸ்டிஎம் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் கோவில்பட்டி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, சங்கரன்கோவில், விருதுநகர், சாத்தூர், பெரம்பலூர், ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
14 பிரிவுகளில் நடைபெற்ற யோகா போட்டியில் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு தமிழ்நாடு யோகா விளையாட்டு வளர்ச்சிக் கழக பொதுச் செயலாளர் மாரியப்பன் தலைமை வகித்தார். எஸ்எஸ்டிஎம் கல்லூரி செயலாளார் கண்ணன், முதல்வர் செல்வராஜ், தமிழ் கல்ச்சுரல் மற்றும் யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் தலைவர் அழகுதுரை, துணைத் தலைவர் கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில், நகர மன்ற உறுப்பினர் கவியரசு, முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் ராமர், பயிற்சியாளர்கள் சூரிய நாராயணன், சோலை நாராயணன், சந்தனராஜ், ராஜேஷ் ஐயப்பன், கார்த்திக் ராஜா, லட்சுமணன், மேனகா, சண்முக லட்சுமி, புஷ்பரதி, மாரியம்மாள், ஈஸ்வரி, குரு லட்சுமி, நல்லதம்பி, அந்தோணி ராஜ் சதீஷ்குமார், ஆனந்த், தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.தமிழ் கல்ச்சுரல் மற்றும் யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் பொருளாளர் சிவசக்தி வேல்முருகன், மணிகண்டன் ஆகியோர் நன்றி கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu