கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கான சிறப்பு அஞ்சல் உறை: தபால் துறை வெளியீடு
கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், எட்டயபுரம், கயத்தாறு ஆகிய வட்டங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் நிலக்கடலை மானாவாரி முறையில் பயிரிடப்படுகிறது. கரிசல் மண்ணில் விளைந்த கடலையும், தேனியின் வெள்ளமும், தாமிரபரணியின் நீர் ஆகியவை கடலைமிட்டாய் தயார் செய்ய பயன்படுத்தப்படுகிறது.
நமது கோவில்பட்டி கடலைமிட்டாயை சிறுவர் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். பாரம்பரிய பெருமை வாய்ந்த கடலைமிட்டாய்க்கு 2020இல் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலைமிட்டாயின் சிறப்பை இந்தியா மற்றும் உலகளவில் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் அதற்கென சிறப்பு அஞ்சல் உறை இந்திய அஞ்சல் துறையால் கோவில்பட்டி முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் திவ்யா சந்திரன் வெளியிட்டார்.
விழாவில் உதவி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர்கள் வசந்தா சிந்துதேவி, சீதாலட்சுமி, பரமேஸ்வரன், அஞ்சல் ஆய்வாளர் மகேஷ்வர ராஜா, விற்பனை பிரதிநிதி சங்கரேஸ்வரி, புகார் ஆய்வாளர் கேந்திரபாலன், கோவில்பட்டி கடலைமிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் திரளானோர் கலந்து கொண்டனர். இதில் கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பாக பெறப்பட்ட கோவில்பட்டி கடலைமிட்டாய் பொரித்து வெளியிடப்பட்ட முதல் அஞ்சல் உரையில் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தும் நன்றியும் தெரிவித்து தபால் அனுப்பப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu