தென்மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி: ஆதித்தனார் கல்லூரி அணி முதலிடம்

தென்மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி: ஆதித்தனார் கல்லூரி அணி முதலிடம்
X

கோவில்பட்டியில் நடந்த தென்மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி அணி முதலிடம் பெற்று காேப்பையை வென்றது.

கோவில்பட்டியில் நடந்த தென்மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி அணி முதலிடம்.

கோவில்பட்டி யங் ஸ்டார்ஸ் கால்பந்து கழகம் சார்பில் வ.உ.சி., அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் தென்மாவட்ட அளவிலான செவன்ஸ் கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்செந்தூர், விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர், புதியம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 20 கால்பந்து அணிகள் பங்கேற்றனர்.

நேற்று மாலை நடைபெற்ற இறுதிப்போட்டியில், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி அணியும், விருதுநகர் ராம்கோ கால்பந்து அணியும் மோதியது. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில், கடைசி வரை இரு அணிகளும் ஒரு கோலும் போடவில்லை. இதையடுத்து, டை-பிரேகர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில், 2க்கு 1 என்ற கோல் கணக்கில், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி அணி வெற்றி பெற்று, முதல் பரிசை தட்டிச் சென்றது முதல் பரிசை பெற்ற அணிக்கு அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

முன்னதாக நடந்த 3 மற்றும் 4ம் பரிசுக்கான போட்டியில், தூத்துக்குடி லசால் கால்பந்து அணியும், தூத்துக்குடி வி.எப்.சி., கால்பந்து அணியும் மோதியது. இதில், 2-க்கு 1 என்ற கோல் கணக்கில், லசால் அணி வெற்றி பெற்று, 3ம் பரிசைப் பெற்றது.தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு கோவில்பட்டி காவல் துறை டி.எஸ்.பி., உதயசூரியன் தலைமை வகித்து, போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகளை வழங்கினார்.

வ.உ.சி., அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் முனியசாமி முன்னிலை வகித்தார். முதல் பரிசு பெற்ற திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி அணியினருக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் கோப்பையும், 2ம் பரிசு பெற்ற விருதுநகர் ராம்கோ கால்பந்து அணியினருக்கு ரூ.3 ஆயிரம் மற்றும் கோப்பையும், 3ம் பரிசு பெற்ற தூத்துக்குடி லசால் கால்பந்து அணியினருக்கு ரூ.ஆயிரம் மற்றும் கோப்பையும், 4ம் பரிசு பெற்ற தூத்துக்குடி வி.எப்.சி., கால்பந்து அணியினருக்கு ஆறுதல் பரிசாக கோப்பையும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், கோவில்பட்டி யங் ஸ்டார்ஸ் கால்பந்துக் கழக தலைவர் செல்வகுமார், செயலாளர் ரவீந்திரகுமார், பொருளாளர் முத்துமணிராஜன், வக்கீல்கள் சிவா, சங்கர், உடற்கல்வி ஆசிரியர் ஜான்சன் உட்பட கால்பந்தாட்டக் கழக முன்னோடிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!