கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையை விரிவுப்படுத்த வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்!

கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையை விரிவுப்படுத்த வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்!
X

கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையை விரிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையை விரிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மங்கள விநாயகர் கோயிலில் தொடங்கி, கடம்பூர் வரை செல்லும் மந்தித்தோப்பு சாலையை பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்பவும், அதிகரித்து வரும் வாகனப் போக்குவரத்தின் காரணமாகவும், விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அண்மையில் அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து மனு அளித்தனர். மேலும், பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மந்தித்தோப்பு சாலையை விரிவுப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கோவில்பட்டியில் கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் கையெழுத்து இயக்கம் இன்று நடைபெற்றது.

கையெழுத்து இயக்கத்திற்கு கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பின் தலைவர் தமிழரசன் தலைமை தாங்கினார். புனித ஓம் பள்ளியின் தாளாளர் லட்சுமணப் பெருமாள் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்து கையெழுத்திட்டார்.

நிகழ்வில், கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்களின், நிர்வாகிகள் முனைவர்.சம்பத்குமார், கலைச்செல்வம், மக்கள் நீதி மய்யம் ராதாகிருஷ்ணன், வழக்கறிஞர் முருகானந்தம், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பொன்ஶ்ரீராம், மந்தித்தோப்பு ஊழல் எதிர்ப்பு இயக்கம் காந்திராஜ், ஜெய்பீம் அறக்கட்டளையின் தாவீது ராஜா, ஐயப்ப பக்தர்கள் யாக சங்கமம் பொன்னுதுரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒன்றியச் செயலாளர் மாடசாமி, நகரச்செயலாளர் கருப்பசாமி, வழக்கறிஞர் பாபு, இசைக்கலைஞர் பிரபாகரன் ஐஎன்டியுசி ராஜசேகரன், பழனிச்சாமி, நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர். ரவிக்குமார், மருதம் மாரியப்பன், காங்கிரஸ் சிறுபான்மைப்பிரிவு அருள்தாஸ், கட்டிடத் தொழிலாளர் சங்கத்தலைவர் உத்தண்டராமன், ஆகியோர் கலந்துகொண்டனர்.

மந்தித்தோப்பு சாலையை விரிவுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோவில்பட்டியில் உள்ள முக்கிய இடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!