கோவில்பட்டி மந்திதோப்பு சாலையை விரிவு படுத்த வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்

கோவில்பட்டி மந்திதோப்பு சாலையை விரிவு படுத்த வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்
X

கையெழுத்து பெறப்பட்ட மனு மாவட்ட ஆட்சியருக்கு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது.

கோவில்பட்டி மந்தி தோப்பு சாலையை விரிவுபடுத்த வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தப்படியாக கோவில்பட்டி வளர்ந்து வரும் நகரமாக உள்ளது. தீப்பெட்டி தொழில், கடலைமிட்டாய் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் மற்றும் சிறிய தொழிற்சாலைகள் உள்ளதால் நகரம் விரிவடைந்து மக்கள் குடியேறி வருகின்றனர்.

இதனால், மக்கள் குடியேறும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, கோவில்பட்டியில் இருந்து குருமலை வழியாக கடம்பூர் வரை செல்லும் மந்தித்தோப்பு சாலையை விரிவுபடுத்த வேண்டும் என கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கோவில்பட்டியில் இருந்து குருமலை வழியாக கடம்பூர் வரை செல்லும் மந்தித்தோப்பு சாலையை விரிவுபடுத்த வேண்டும் என கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கையெழுத்து படிவங்களை கோரிக்கை மனுவோடு இணைத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு தபால் அனுப்பப்பட்டது.

நிகழ்விற்கு கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன் தலைமை தாங்கினார், செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்களின முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் சுபேதார் கருப்பசாமி, முனைவர் சம்பத்குமார், ஐஎன்டியுசி ராஜசேகரன், உரத்தசிந்தனை சிவானந்தம், தமிழ்நாடு பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு மேரிஷீலா, தொழிலாளர் விடுதலை முன்னணி கலைச்செல்வன், தமிழ்நாடு காமராஜர் பேரவையின் நாஞ்சில் குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் பாபு, மக்கள் நீதிமய்யம் கட்சியின் நிர்வாகி ராதாகிருஷ்ணன், வீரத்தியாகி விஸ்வநாததாஸ் கட்சி ஜெயபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil