கோவில்பட்டி பள்ளியில் நிழல் இல்லா அதிசய நாள் கொண்டாட்டம்

கோவில்பட்டி பள்ளியில் நிழல் இல்லா அதிசய நாள் கொண்டாட்டம்
X

கோவில்பட்டி ஐசிஎம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகள்.

கோவில்பட்டி அஸ்ட்ரோ கிளப் சார்பில் நிழல் இல்லா அதிசய நாள் கொண்டாட்டம் ஐசிஎம் நடுநிலைப்பள்ளியில் வைத்து கொண்டாடப்பட்டது.

நிழல் இல்லா நாள் என்பது ஒரு அரிய வான்நிகழ்வு ஆகும். நண்பகலில் சூரியன் நேரடியாக தலைக்கு மேல் இருக்கும் போது ஆண்டுக்கு இரண்டு முறை நிழல் இல்லா நாள் என்பது நிகழும். 23.5 டிகிரி வடக்கு அட்சரேகைக்கும் 23.5 டிகிரி தெற்கு அட்சரேகைக்கும் இடைப்பட்ட கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடைப்பட்ட இடங்களில் நிகழ்கிறது.

நாடு முழுவதும் இந்த நிகழ்வு பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் பல்வேறு இடங்கள் மற்றும் பள்ளிகளில் நிழல் இல்லா அதிசய நாளை பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பல்வேறு வகைகளில் வரவேற்று பார்வையிட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஐசிஎம் நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகள் வட்டமாக நின்றும், தரையில் குச்சியை ஊன்றியும் நிழல் இல்லாததை சரியாக 12.18 மணிக்கு கண்டறிந்தனர். அப்போது, நிழல் இல்லாததைக் கண்டு மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்ததோடு வியந்து பார்த்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ஐசிஎம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ராதா தலைமை வகித்தார். கோவில்பட்டி அஸ்ட்ரோ கிளப் ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ்குமார், முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி ஆசிரியை அபிலாதிரேஸ் அனைவரையும் வரவேற்றார்.

தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி கலந்து கொண்டு நிழலில்லா நாள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கி பேசினார். பள்ளி மாணவ மாணவிகள் அனைவருக்கும் தொலைநோக்கி மூலம் வானில் நடக்கும் நிகழ்வுகளை பார்வையிட பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள்,மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் செல்வகுமார் நன்றி கூறினார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!