கோவில்பட்டியில் புகையிலை பொருட்கள் பறிமுதல்: 2 பேர் கைது

கோவில்பட்டியில் புகையிலை பொருட்கள் பறிமுதல்: 2 பேர் கைது
X

கோவில்பட்டியில் குடோனில் பதுக்கி வைத்திருந்த தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.

கோவில்பட்டியில் குடோனில் பதுக்கி வைத்திருந்த தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.

கோவில்பட்டி ஜோதி நகரில் உள்ள குடோனில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து, கடைகளுக்கு விற்பனை செய்வதாக கிழக்கு காவல்நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கோவில்பட்டி டிஎஸ்பி உதயசூரியன், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த், உதவி ஆய்வாளர் பரமசிவம், தலைமைக் காவலர் வைரமுத்து, காவலர் ராமசுந்தரம் ஆகியோர் அந்த குடோனுக்கு சென்று அதிரடிச் சோதனை நடத்தினர்.அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மூட்டை, மூட்டையாக பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து மொத்தம் 35 மூடைகளில் ரூ.5 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக ஜோதிநகர் 4-வது தெருவைச் சேர்ந்த தனபால் மகன் தங்கமாரியப்பன் (45), சிந்தாமணி நகர் ராஜேந்திரன் மகன் கண்ணன் (வயது 52) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story
ai based healthcare startups in india