கோவில்பட்டியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.89 ஆயிரம் பறிமுதல்

கோவில்பட்டியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.89 ஆயிரம் பறிமுதல்
X

கோவில்பட்டியில் ஆவணங்களின்றி கொண்டு சென்ற இறைச்சிக் கடை உரிமையாளரிடம் 89.800 ரூபாய் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

கோவில்பட்டியில் ஆவணங்களின்றி கொண்டு சென்ற இறைச்சி கடை உரிமையாளரிடம் ரூ.89.800 பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

கோவில்பட்டியில் ஆவணங்களின்றி கொண்டு சென்ற இறைச்சிக் கடை உரிமையாளரிடம் 89.800 ரூபாய் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டயபுரம் ரோடு திட்டங்குளம் அருகே பகுதியில் தேர்தல் பறக்கும் படை தாசில்தார் ராஜ்குமார் தலைமையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மாரியப்பன், காவலர்கள் செல்வகுமார், தலைமைப் பெண் காவலர் செல்வி ஆகியோர் கொண்ட தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். 89.800 ஆயிரம் ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து லாரியை ஓட்டி வந்த கோவில்பட்டியை சேர்ந்த மும்தாஜ் மாட்டு இறைச்சி கடை உரிமையாளர் சம்சுதீன் (37) என்பவரிடம் விசாரணை நடத்தினர். பணத்துக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால், பறக்கும் படை அதிகாரிகள் 89.800 ரூபாய் பறிமுதல் செய்து, கோவில்பட்டி நகராட்சி மேலாளர் பெருமாளிடம் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்கள் கொண்டு வந்து காண்பித்து பணத்தை பெற்றுக்கொள்ளும்படி சம்சுதீன்லிடம் உள்ள அறிவுறுத்தினர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!