கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
X

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அறிவியல் மன்றத்தின் சார்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அறிவியல் மன்றத்தின் சார்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அறிவியல் மன்றத்தின் சார்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்திய அறிவியலின் தந்தை சர்.சிவி. ராமன் பிறந்த தினமான நவம்பர் 7 ஆம் தேதி நாடு முழுவதும் கல்வி நிலையங்களில் பல்வேறு அறிவியல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது அறிவியல் திறமைகள், கண்டுபிடிப்புகள் குறித்து வெளிப்படுத்தினர்.

இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அறிவியல் மன்றத்தின் சார்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்த அறிவியல் கண்காட்சியில் கழிவுசெய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு அறிவியல் படைப்புகள் இடம்பெற்றன.


அறிவியல் கண்காட்சியினை கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் பார்வையிட்டனர். கடந்த 5ம் தேதி வள்ளியூரில் நடந்தகுழந்தைகள் அறிவியல் மாநாட்டில் மண்டல அளவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் பிரபுதலைமை வகித்தார். கோவில்பட்டி அஸ்ட்ரோ கிளப் ஒருங்கிணைப்பாளர் முத்துமுருகன் முன்னிலை வகித்தார். பள்ளி அறிவியல் ஆசிரியர் இந்துமதி அனைவரையும் வரவேற்றார்.

குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் மண்டல அளவில் கலந்துகொண்ட மாணவர்கள் ஹரிஹரன், சூரிய பிரகாஷ் ஆகியோருக்கு பள்ளி முதல்வர் பிரபு சான்றிதழ் வழங்கினார். இதில் அறிவியல் மன்ற ஆசிரியர்கள் ராஜா, ரேகா, காளீஸ்வரி, ராமமூர்த்தி உள்பட பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை கீதாராணி நன்றி கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!