கோவில்பட்டியில் ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் திருட முயன்ற வாலிபர்

கோவில்பட்டியில் ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் திருட முயன்ற வாலிபர்
X

 ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் திருட முயன்ற வாலிபர்

ஏ.டி.எம் மையத்திற்கு வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க சென்ற போது இயந்திரத்தின் கீழ் பகுதி திறந்து கிடந்ததை தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பசுவந்தனை சாலையில் தனியார் திருமண மண்டபம் அருகே தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது.

இன்று காலையில் ஏ.டி.எம் மையத்திற்கு வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க சென்ற போது ஏ.டி.எம். எந்திரத்தின் கீழ் பகுதி திறந்து கிடந்தது.

மேலும் அதிலிருந்து எச்சரிக்கை அலார சத்தம் ஒலித்துக் கொண்டே இருந்துள்ளது. இதனை கண்டு வாடிக்கையாளர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் வங்கி தரப்பில் இருந்தும் எச்சரிக்கை மணி ஒலிப்பது பற்றி கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் ஏ.டி.எம். மையத்தில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது மர்ம நபர் ஒருவர் இன்று அதிகாலை 4.33 மணிக்கு ஏ.டி.எம். எந்திரத்தின் பணம் இருக்கும் அடிப்பகுதியை திறக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் காட்சிகள் இருப்பது அதில் பதிவாகி இருந்தது.

எச்சரிக்கை அலார சத்தம் ஒலித்ததை தொடர்ந்து அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடியதும் அந்த காட்சிகள் மூலம் தெரியவந்தது.

இதையடுத்து கைரேகை நிபுணர்கள் ஏ.டி.எம். மையத்திற்கு வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story