சுடுகாட்டுக்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு: கிராம மக்கள் மறியல்

சுடுகாட்டுக்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு:  கிராம மக்கள் மறியல்
X

கோவில்பட்டி கூசாலிபட்டியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

கோவில்பட்டி அருகே கூசாலிபட்டியில் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

கோவில்பட்டி அருகே கூசாலிபட்டியில் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கூசாலிபட்டி கிராம மக்கள் அந்தப் பகுதியில் உள்ள பொது இடத்தை இறந்தவர்களை அடங்கம் செய்யவும், தகனம் செய்யவும் சுடுகாட்டுக்கு நீண்ட வருட காலமாக பயன்படுத்தி வந்து உள்ளனர். இந்நிலையில் திடீரென தனி நபர் ஒருவர் சுடுகாட்டிற்கு செல்லக்கூடிய பாதையை ஆக்கிரமிப்பு செய்ததாக்க கூறப்படுகிறது.

இதற்கிடையே, கூசாலிப்பட்டியில் பாப்பாத்தி என்ற மூதாட்டி இன்று இறந்ததால் அவரது உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து கோவில்பட்டி கடலையூர் சாலையில் நூற்றுக்குகும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் என அந்தப் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி வட்டாட்சியர் வசந்த மல்லிகா மற்றும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் தர்மராஜ் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்ட அந்தப் பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் உயர் அதிகாரிகளுக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர்.

பேச்சுவார்த்தையில் தனிப்பட்ட நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகளும், காவல் துறையினரும் உறுதி அளித்தனர். இதையெடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare