கோவில்பட்டியில் ரேஷன் அரிசி பதுக்கல்: மாவு மில்லுக்கு சீல் வைப்பு..!
மாவு மில்லில் சோதனை நடத்திய அதிகாரிகள் குழுவினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்படும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. பதுக்கி வைக்கப்படும் ரேஷன் அரிசி மூட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவது உண்டு.
மேலும், பதுக்கப்படும் ரேஷன் அரிசி மூட்டைகளை பட்டை தீட்டி அவற்றி மாவாக அரைத்து விற்பனை செய்யும் சம்பவமும் நிகழ்ந்து வருகிறது. இதுதொடர்பாக அவ்வப்போது எழும் புகார்களைத் தொட்ர்ந்து அதிகாரிகள் குழுவினர் சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பது வழக்கம்.
அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அத்தை கொண்டான் தெருவில் லட்சுமி மாவு மில்லில் ரேஷன் அரிசியை முறைகேடாக வாங்கி இருப்பு வைத்து மாவாகவும் மற்றும் குருணையாகவும் பதுக்கி வைத்து இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையெடுத்து, கோவில்பட்டி வட்டாட்சியர் லெனின் தலைமையிலான அதிகாரிகள் அந்த மாவு மில்லில் திடீரென சோதனை மேற்கொண்டனர். சோதனையின்போது அந்த மாவு மில்லில் 82 கிலோ ரேஷன் அரிசியும், மதுரைக்கு அனுப்பி வைக்கா தயாராக வைக்கப்பட்டிருந்த 3.1 டன் குருணையாக்கப்பட்ட ரேஷன் அரிசியும் இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதுதொடர்பாக மாவு மில் உரிமையாளர் ராமமூர்த்தியிடம் வட்டாட்சியர் லெனின் விசாரணை நடத்தியபோது, அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினார். சரியான ஆவணங்களையும் காட்டத் தவறினார். இதையடுத்து, ரைஸ் மில்லுக்கு ஆலம்பட்டி வி.ஏ.ஓ., வேல்சாமி, கிராம உதவியாளர் கற்பகம் ஆகியோர் சீல் வைத்தனர். சோதனையின்போது, கோவில்பட்டி வட்ட வழங்கல் அலுவலர் பொன்னம்மாள், துணை வட்டாட்சியர் அகஸ்டின் பாலன் மற்றும் கோவில்பட்டி மேற்கு போலீசார் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu