தூத்துக்குடி மாவட்ட வரலாறு குறித்த ஆங்கிலப் புத்தகம் வெளியீடு

தூத்துக்குடி மாவட்ட வரலாறு குறித்த ஆங்கிலப் புத்தகம் வெளியீடு
X

கோவில்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட வரலாறு குறித்தை ஆங்கிலப் புத்தகத்தை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டார்.

கோவில்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட வரலாறு குறித்த ஆங்கில புத்தகத்தை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள மறைந்த எழுத்தாளர் கி.ரா. நினைவு இல்லத்தில் இலக்கிய கலை மற்றும் இசை சங்க உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வரவேற்றார். தபேல்தார் பொற்செழியன் வரவேற்றார்.

கூட்டத்தில் கி.ரா. நினைவு இல்லத்தில் கூடுதல் கழிவறை கட்டுதல், நூலகத்துக்கு கூடுதல் புததகம் பெறுவது சம்பந்தமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய தூத்துக்குடி மாவட்ட வரலாறு ஆங்கில நூலை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட சாகித்ய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளர் தர்மன் பெற்றுக்கொண்டார்.

ஏற்கெனவே வெளியிட்ட தமிழ் நூலையும் மேடையில் அறிமுக படுத்தினர். நூல் ஆங்கில மொழி பெயர்ப்பாளர் காட்சன் ஓய்லி தாஸ், களப்பணியில் உதவிய மேலஆழ்வார்தோப்பு கிராம உதயம் மேலாளர் வேல்முருகன், புகைப்பட கலைஞர் சுடலைமணிசெல்வன், பதிப்பாசிரியர் அபிஷ்விக்னேஷ் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட இலக்கியம் கலை மற்றும் இசை சங்க உறுப்பினர்களான தர்மன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர். நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ் குமார், கோவில்பட்டி சார் ஆட்சியர் ஜேன் கிறிஸ்டி, மக்கள் தொடர்பு அதிகாரி நவீன் பாண்டியன், மாவட்ட கலை பண்பாட்டு துறை உதவி இயக்குநர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட நூலக அதிகாரி சிவசங்கர், கோவில்பட்டி நகராட்சி தலைவர் கஸ்தூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, கி.ரா. சிலைக்கு த.மா.கா. ராஜகோபால் ஏற்பாட்டில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செய்தார். நிகழ்ச்சியில் கீழ நாட்டார்குளத்தினை சேர்ந்த வில்வித்தை சாதனையாளர் சுப்பு லெட்சுமி மாவட்ட ஆட்சியரால் கௌரவிக்கப்பட்டார். கலைபண்பாட்டுத் துறை இயக்குநர் கோபால கிருஷ்ணன் நன்றி கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!