Public Demand Remove Water Canal Occupy கோவில்பட்டியில் நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பு புகார்: வட்டாட்சியர் நேரில் ஆய்வு
நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பு புகார் தொடர்பாக வட்டாட்சியர் லெனின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
Public Demand Remove Water Canal Occupy
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள இடைச்செவல் கிராமத்தில் வடக்கு கண்மாய் உள்ளது. இந்த கண்மாய்க்கு பொன்னுத்தாய் கோவில் தெரு பகுதியில் உள்ள நீர்வரத்து ஓடை கால்வாய் மூலமாக மழைக்காலங்களில் தண்ணீர் வந்துள்ளது.
இதற்கிடையில் பொன்னுத்தாய் கோவில் தெரு வழியாக மழைக்காலத்தில் செல்ல முடியாத நிலை இருப்பதாகவும், அந்தப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்ல விவசாயிகள் பாதை வேண்டும் என்று கோரிக்கை வைத்தாக கூறப்படுகிறது.
இதையடுத்து தனியார் காற்றாலை நிறுவனத்தின் மூலமாக அந்தப் பகுதியில் சரள் மண் கொண்டு பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வடக்கு கண்மாய்க்கு வந்த நீர்வரத்து ஓடை கால்வாயை மூடி பாதை அமைக்கப்பட்டு வருவதாகவும், இதனால் கண்மாய்க்கு தண்ணீர் வரத நிலை ஏற்படுவது மட்டுமின்றி,, மற்றொரு பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத் தொடர்ந்து கோவில்பட்டி வட்டாட்சியர் லெனின் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட ஆய்வு செய்தனர். மேலும், மூடப்பட்ட நீர் வரத்து கால்வாய் பகுதியை மீண்டும் தோண்டி தண்ணீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும், புதிய பாதை அமைக்கப்படும் பகுதியை சர்வே செய்து, நீர் வரத்து ஓடையை தவிர்த்து பாதை அமைத்து கொள்ளுமாறு வட்டாட்சியர் லெனின் அறிவுறுத்தினார்.
இதையடுத்து மூடப்பட்ட நீர் வரத்து கால்வாய் தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது கிராம நிர்வாக அலுவலர் சங்கரேஷ்வரி மற்றும் நாலாட்டின்புதூர் காவல்நிலைய போலீசார் ஆகியோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu