கோவில்பட்டி தனியார் தினசரி சந்தை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம்

கோவில்பட்டி தனியார் தினசரி சந்தை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம்
X

கோவில்பட்டி தனியார் தினசரி சந்தை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் போராட்டம் நடைபெற்றது

கோவில்பட்டி தனியார் தினசரி சந்தை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் போராட்டம் நடைபெற்றது

கோவில்பட்டியில் உள்ள நகராட்சி தினசரி சந்தை இடிக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து ஒரு பிரிவினர் அரசு ஒதுக்கீடு செய்த கூடுதல் பஸ் நிலையத்தில் உள்ள தற்காலிக தினசரி சந்தையில் வணிகம் செய்து வருகின்றனர்.

மற்றொரு பிரிவினர் அரசு ஒதுக்கீடு செய்த இடத்திற்கு செல்லாமல் திட்டங்குளத்தில் அவர்கள் வாங்கிய இடத்தில் தனியாக சந்தை தொடங்கி உள்ளனர். எந்தவித உரிய அனுமதியும் பெறமால் தனியார் தினசரி சந்தை செயல்பட்டு வருவதாக ஊராட்சி ஒன்றிய அலுவலர் நோட்டிஸ் வழங்கிய பிறகும் தொடர்ந்து செயல்பட்டு வந்த காரணத்தினால் அதற்கு தடை விதிக்க வலியுறுத்தி சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அடுத்த மாதம் 26 ஆம் தேதி வரை தனியார் தினசரி சந்தை செயல்பட இடைக்கால தடை விதித்துள்ளது. நீதிமன்ற உத்தரவிற்கு பின்னரும், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் நீதிமன்ற உத்திரவினை மீறி தனியார் தினசரி சந்தை தொடர்ந்து செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தி ஐந்தாவது தூண் அமைப்பின் தலைவர் சங்கரலிங்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாரிமுத்து, ராஜேஷ் கண்ணா, திட்டங்குளத்தை சேர்ந்த செந்தில்குமார் ஆகியோர் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையெடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். நீதிமன்ற உத்தரவு குறித்த நகல் தங்களுக்கு வரவில்லை, வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் சரவணன் தற்போது நீதிமன்ற உத்தரவு நகல் வழங்கி உள்ளார். எனவே இதுகுறித்து கோட்டாட்சியருடன் ஆலோசனை நடத்தி விரைவில் நிதிமன்ற உத்தரவு அமுல்படுத்தப்படும் என்று உறுதியளித்தை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்காலிகமாக போராட்டத்தினை கைவிட்டனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!