மின் திருத்த சட்டத்தை கைவிடக் கோரி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மின் திருத்த சட்டத்தை கைவிடக் கோரி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

கோவில்பட்டி மின்சார வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டம்.

மத்திய அரசு கொண்டு வரவுள்ள மின்சாரம் திருத்த சட்டம் 2021யை கைவிடக் வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மின்சார வாரிய ஊழியர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் மின் திருத்த சட்டம் 2021யை மத்திய அரசு கைவிட கோரியும், மின்சார வாரிய தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்தும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

மின்சார வாரிய அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்பாட்டத்தில் மின்சார வாரிய அனைத்துதொழிற்சங்க கூட்டமைப்பினர் கலந்துகொண்டனர்.தொழிலாளர் முன்னேற்ற சங்க கோட்ட செயலாளர் பூல் பாண்டியன் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் மின் திருத்த சட்டம் 2021யை கொண்டு வருவதால், மின்சார வாரியம் தனியார் மயமாக்கப்படுவது மட்டுமின்றி, விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் ரத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் எழ வாய்ப்புள்ளது எனவும், இதனால் மின் திருத்த சட்டத்தை கைவிட வலியுறுத்தி திரளான மின்வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டு தங்களது கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தெ.மு.ச.சிஐடியூ, அண்ணாதொழிற்சங்கம், மின்சார வாரிய ஐக்கிய பொறியாளர்கள் சங்கம், மின்சார வரிய ஊழியர்கள் பெடரேஷன் யூனியன் ஆகிய தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story