கோவில்பட்டி: 30 குண்டுகள் முழங்க காவலர் கனகவேல் உடல் மரியாதையுடன் தகனம்

கோவில்பட்டி: 30 குண்டுகள் முழங்க காவலர் கனகவேல் உடல் மரியாதையுடன் தகனம்
X
ஏ.டி.எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையில் காவல்துறையினர், பொது மக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், 30 குண்டுகள் முழங்க கனகவேல் உடல் தகனம் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், சூரங்குடி அருகேயுள்ள கே.தங்கம்மாள் புரத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் கனகவேல் (27), தருவைகுளம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார்.

இவர் நேற்று தங்கம்மாள்புரத்திற்கு பைக்கில் சென்றுவிட்டு, தருவைக்குளம் காவல் நிலையத்திற்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக வடக்கிலிருந்து தெற்காக திரும்பி வரும்போது பாலார்பட்டி விலக்கில் வந்தபோது எதிரே வந்த டாட்டா ஏஸ் என்ற வாகனம், இவரது பைக் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தருவைக்குளம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை செய்தார். விபத்தில் உயிரிழந்த கனகவேல் இவர் 2017ம் ஆண்டு இரண்டாம் நிலைக் காவலராக பணியில் சேர்ந்து, ஆயுதப்படையில் பணியாற்றியவர் கடந்த 17.11.2019 அன்று தாலுகா காவலராக தருவைக்குளம் காவல் நிலையத்தில் நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, இவருக்கு முத்துமாரி என்ற தாயாரும், கல்லூரியில் படித்து வரும் துரைசிங்கம் (24) என்ற தம்பியும் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவில்பட்டியில் உள்ள மறவர் காலனியில் தனது குடும்பத்தினருடன் குடியேறி பணிக்கு சென்ற வந்த நிலையில் தான் விபத்தில் சிக்கி கனகவேல் உயிரிழந்தார். தூத்துக்குடி அரசு மருத்துக்கல்லூரியில் உடற்கூறாய்வு முடிந்து மறவர்காலனியில் உள்ள இடுகாட்டிற்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு ஏ.டி.எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையில் காவல்துறையினர், பொது மக்கள் மற்றும் அவரது உறவினர்கள் மரியாதை செய்தனர். இதையெடுத்து காவல்துறையினர் 30 குண்டுகள் முழங்க மரியாதையுடன் கனகவேல் உடல் தகனம் செய்யப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!