கோவில்பட்டியில் செல்போன் திருடனை துரத்திய சிறுவனுக்கு போலீசார் பாராட்டு
சிறுவன் நவீனுக்கு பாராட்டி பரிசு வழங்கும் போலீசார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பாரதிநகரைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டியன். இவரது மகன்கள் நவீன், செழியன். இதில் நவீன் 6ம் வகுப்பும், செழியன் 4ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இன்று மாலை செழியன் வீட்டு அருகே தனது தந்தையின் செல்போனை வைத்து விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர் செழியன் வைத்து இருந்த செல்போனை பறித்துக்கொண்டு ஓடியுள்ளார்.
இதனை அருகில் இருந்த பார்த்த செழியனின் அண்ணன் நவீன், அந்த மர்ம நபரை பின் தொடர்ந்து விரட்டியுள்ளான். மேலும் திருடன், திருடன் பிடியுங்கள் என்று நவீன் கத்திக் கொண்டே தூரத்தி சென்றுள்ளனார். ஆனால் அங்கிருந்தவர்கள் யாரும் உதவிக்கு முன்வரவில்லை.
இருந்த போதிலும், சிறுவன் நவீன் விடமால் அந்த மர்ம நபரை தூரத்தி பிடிக்க முயற்சி எடுத்துள்ளான். அங்குள்ள சந்து,பொந்துகளில் புகுந்து அந்த மர்ம நபர் ஓடியுள்ளான். சிறுவன் நவீனும் விடமால் தூரத்திச் சென்று, மர்ம நபரின் சட்டையை பிடித்து இழுத்துள்ளான். அப்போது அந்த மர்ம நபரின் சட்டையில் இருந்த ஒரு செல்போன் விழ, அதனை சிறுவன் லாவகமாக கேட்ச் பிடித்தது மட்டுமின்றி, தொடர்ந்து தூரத்து உள்ளான்.
இருப்பினும் அந்த மர்ம நபர் தப்பியோடியதாக தெரிகிறது. இதையெடுத்து தனது கைக்கு வந்த செல்போனை பார்த்தபோது, அது தனது தந்தையுடையது இல்லை என பெற்றோருடன் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு சென்று ஒப்படைத்தார்.
இதையெடுத்து சிறுவன் நவீன் கொடுத்த செல்போனில் இருந்த அழைப்புகளை எடுத்து போலீசார் விசாரணை நடத்தி அந்த செல்போனுக்கு உரியவர்களை வரவழைத்து ஒப்படைத்தனர். மேலும் சுந்தரபாண்டியன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவன் செழியனிடம் இருந்து செல்போனை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் பொது மக்கள் யாரும் உதவிக்கு வரமால் இருந்த போதிலும் சிறுவன் நவீன் திருடனை பிடிக்க மேற்க்கொண்ட முயற்சியையும், திருடனிடம் இருந்து கைப்பற்றிய செல்போனை காவல் நிலையத்தில் ஒப்படைத்ததை பாராட்டும் வகையில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி சிறுவன் நவீனுக்கு பரிசு வழங்கி சிறுவனின் செயலை பாராட்டினார்.
எது நடந்தாலும் நமக்கு ஏன் என்று செல்லும் மக்கள் வாழும் மத்தியில் திருடனை பிடிக்க சிறுவன் நவீன் எடுத்த முயற்சி பாராட்டுக்குரியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu