கோவில்பட்டி ஆசிரியைக்கு தமிழில் பாராட்டு கடிதம் அனுப்பிய பிரதமர் மோடி
பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட கோவில்பட்டி ஆசிரியை யசோதா.
பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டில் உள்ள பல்வேறு சாதனையாளர்கள் குறித்து வானொலியில் பேசி வருகிறார். மேலும், பண்டைய காலாசாரங்கள் குறித்தும், மாணவ, மாணவிகள், சாதனையாளர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் பேசிய வரும் பிரதமர் மோடி சாதனையாளர்களுடன் கலந்துரையாடியும் வருகிறார்.
இதேபோல, கடந்த ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால வளர்ச்சியை உருவாக்கும் வகையில் பரிக்சா பே சர்ச்சா என்ற இயக்கத்தை உருவாக்கினார். அந்த இயக்கத்தில், நாட்டின் உள்ளவர்கள் கல்வி வளர்ச்சி குறித்தும், மாணவர்களின் தனித்திறமைகள் குறித்தும் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவரான விவசாயி ராஜேந்திரனின் யசோதா கல்வி மற்றும் மாணவர்களின் தனித்திறன்கள் வளர்ச்சி குறித்த தனது கருத்துக்களை அந்த இயக்கத்தில் எடுத்துரைத்து உள்ளார். யசோதா கோவில்பட்டி சுபாநகரில் உள்ள எடுஸ்டார் என்ற தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
ஆசிரியை யசோதா ஆன்லைன் மூலமாக தனது தலைப்பு குறித்து கருத்துக்களை கூறியுள்ளார். குறிப்பாக பள்ளியில் கல்வி மட்டுமின்றி, மாணவர்களின் பல்வேறு தனித்திறமைகளை வளர்க்கும் கல்வியாக இருக்க வேண்டும், குறிப்பாக தலைமை பண்பு, பொது மக்களிடம் எந்தவித தயக்கம் இல்லமால் தங்களது கருத்துகளை எடுத்துரைப்பது தொடர்பாகவும் ஆசிரியை யசோதா கருத்து தெரிவித்துள்ளார்.
ஆசிரியை யசோதா தெரிவித்த கருத்துக்கள் மாணவர்களின் வளர்ச்சிக்கு முக்கியமானவையாக இருப்பதாகவும், அதற்கு தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்ளவதாக பிரதமர் நரேந்திர மோடி, ஆசிரியை யசோதாவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார். பிரதமர் மோடி அனுப்பிய கடிதம் தமிழில் உள்ளது குறிப்பிடதக்கது ஆகும். பிரதமர் மோடி தமிழில் எழுதிய கடிதத்தில் கையொப்பமிட்டு தனக்கு அனுப்பியது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தனது கருத்துக்கு கிடைத்த பெருமை என்றும் ஆசிரியை யசோதா தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu