கோவில்பட்டியில் ஓவிய கண்காட்சி: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு
கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஓவிய கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நேஷனல் பொறியியல் கல்லூரி மற்றும் சித்திரம் கலைக்கூடம் ஆகியவை இணைந்து ஓவியமணி கொண்டையராஜூவின் 125 ஆவது பிறந்தநாள் விழா மூன்று நாள் ஓவிய கண்காட்சி மற்றும் ஓவியமணி கொண்டையராஜூவின் கலைப்பொக்கிஷம் 125' என்ற நூல் வெளியீட்டு விழா கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு, நேஷனல் பொறியியல் கல்லூரியின் துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். கல்லூரி தாளாளர் அருணாச்சலம் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றினார்.
மேலும், ஓவியமணி கொண்டையராஜூவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்து ஓவிய கண்காட்சியை கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து கல்லூரியின் துணைத் தலைவர் ஓவியமணி கொண்டையராஜூ கலைப்பொக்கிஷம் 125 என்னும் நூல் வெளியிடப்பட்டது. அந்த நூலை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பெற்றுக் கொண்டார்.
ஓவிய கண்காட்சியில் ஓவியமணி கொண்டையராஜூ வரைந்த காணக்கிடைக்காத அரிதான 500-க்கும் மேற்பட்ட இந்து சமய, சைவ, வைணவ தெய்வப்படங்கள், மதுரையில் உள்ள கலைமகள் பதிப்பகம், திருவேங்கடம் பதிப்பகம், துர்கா பிக்சர் பேலஸ், வன்னி புத்தக நிலையம், ஓவியர் முருகபூபதி, ஞானகுரு மற்றும் ஓவிய ஆர்வலர் ஆறுமுகம், சித்திரம் கலைக்கூடம் கார்த்திகைச் செல்வம் உள்ளிட்டோரிடம் இருந்து, அரிதான ஓவியமணி கொண்டையராஜூ வரைந்த ஓவியங்கள் சேகரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன.
நிகழ்ச்சியில், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், மாவட்ட கவுன்சிலர் சத்யா, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், மேற்கு ஒன்றிய செயலாளர் அழகர்சாமி, மேற்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் அம்பிகை பாலன், கதர் ஸ்டோர்ஸ் சுப்புராஜ், கோபி, முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu