கோவில்பட்டியில் காதலுக்காக நண்பனை தீர்த்துக் கட்டிய சிறுவன், பகீர் தகவல்
கோவில்பட்டியில் காதலிக்கும் பெண்ணிடம் சாட்டிங் செய்த நண்பனை கொலை செய்ய சிறுவன் பயன்படுத்திய அரிவாள்,
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஸ்டாலின் காலனியைச் சேர்ந்தவர் பொய்யாமொழி மகன் மதன்குமார் (21). பெயின்டர் வேலை பார்த்து வந்தார். கடந்த 30ம்தேதி மந்தித்தோப்பு காட்டு பகுதியில் தலை துண்டித்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
கொலையாளிகளை பிடிக்க எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் டிஎஸ்பி உதயசூரியன் மேற்பார்வையில் மேற்கு இன்ஸ்பெக்டர் சபாபதி, நாலாட்டின்புதூர் இன்ஸ்பெக்டர் பத்மாவதி, எஸ்ஐக்கள் குருசந்திரவடிவேல், துரைச்சாமி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் கொலையாளியை தேடிவந்தனர்.
இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி, கோவில்பட்டி அருகே தீத்தாம்பட்டடியை. சேர்ந்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
மேலும் காதல் போட்டியில் அவர் மதன்குமாரை கொலை செய்தது தெரியவந்தது. அச்சிறுவனிடம் இருந்து அரிவாள் மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
போலீசில், அச்சிறுவன் அளித்துள்ள வாக்குமூலம்: நானும், மதன்குமாரும் நண்பர்கள். இருவரும் ஒன்றாகவே பெயின்டர் வேலைக்கு செல்வோம்.
நான் ஒரு இளம் பெண்ணை காதலித்தேன். அதே பெண்ணை அவனும் காதலித்து வந்துள்ளான். இந்த விவரம் எனக்கு தெரியாது.
சில தினங்களுக்கு முன் நான் அவனது செல்போனை வாங்கி பார்த்தபோது அந்த இளம்பெண்ணுடன் அவன் சார்ட்டிங் செய்திருப்பது தெரியவந்தது.
இதனால் நான், மதன்குமாரை கண்டித்தேன். ஆனாலும் அவன் கேட்கவில்லை. நான் காதலிக்கும் பெண்ணை, மதன் குமாரும் காதலித்ததால் அவனை அவனை தீர்த்துக் கட்ட முடிவு செய்தேன்.
அதன்படி சம்பவத்தன்று மந்தித் தோப்பு காட்டுப்பகுதிக்கு முன் கூட்டியே சென்று அங்குள்ள முட்செடியில் அரிவாளை மறைத்து வைத்தேன்.
அதன் பிறகு பைக்கில் கோவில்பட்டி வந்து மது குடிக்க செல்வோம் என்று கூறி மதன் குமாரை பைக்கில் மந்ததித்தோப்பு காட்டு பகுதிக்கு அழைத்து வந்தேன்.
அங்கு வைத்து இருவரும் மது அருந்தினோம். அதன்பிறகு நான், சிறுநீர் கழித்து வருவதாக மதன்குமாரிடம் கூறிச் சென்றேன்.
பின்னர் நான், ஏற்கனவே மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வந்தேன். அப்போது அவன் செல்போன் பார்த்துக் கொண்டிருந்தான்.
பின்னால் வந்த நான், மதன்குமாரின் கழுத்தில் ஓங்கி அரிவாளால் வெட்டினேன். இதில் அவன், தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே இறந்தான்.
அதன் பிறகு அரிவாளை அங்குள்ள கண்மாயில் வீசி விட்டு தப்பிச் சென்று விட்டேன். நான், கதிரேசன் கோவில் மலையடிவாரத்தில் உள்ள புலிக்குகை பகுதியில் பதுங்கியிருந்த போது போலீசார் என்னை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர், வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில். கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினரை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார்.
இதனை தொடர்ந்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் வைத்து செய்தியாளர்களிடம் எஸ்.பி.ஜெயக்குமார் பேசுகையில் பெயிண்டர் கொலை வழக்கு தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்ய இரு தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது.
தனிப்படையினர் வெவ்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். மேலும் கொலையாளியின் செல்லிடப் பேசியை ஆய்வு செய்த போலீஸார் தொழில்நுட்ப ஆய்வில் மதன்குமாரை கொலை செய்தவர் தீத்தாம்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.
கொலையான மதன்குமாரும், 17 வயது சிறுவனும் ஒரே பெண்ணை காதலித்ததால் ஏற்பட்ட தகராறில் அவனை கொலை செய்ய திட்டமிட்டதாக சிறுவன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என்றார்/
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu