கோவில்பட்டியில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு; கிராம மக்கள் போராட்டம்

கோவில்பட்டியில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு;  கிராம மக்கள் போராட்டம்
X

கோவில்பட்டி அய்யனார் ஊத்து கிராமத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.

கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கோவில்பட்டி அருகே கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு நிலவியது.

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனிமங்களை எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், குடியிருப்பு பகுதிகளின் அருகே கல்குவாரி அமைக்க தடை விதிக்க வேண்டும் என்றும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தைப் பொருத்தவரை விளாத்திக்கும், கோவில்பட்டி, திருவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் கல்குவாரி அமைக்கக் கூடாது என வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு ஒன்றியம் அய்யனார் ஊத்து கிராமத்தில் கல்குவாரி அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அதை தடைசெய்ய வலியுறுத்தி அந்தப் பகுதி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடமும், வட்டாட்சியரக் அலுவலகத்திலும் மனு கொடுத்தனர்.

இருப்பினும், அய்யனார் ஊத்து கிராமத்தில் கல்குவாரி அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால் கல்குவாரி அமைக்க தடை விதிக்க வலியுறுத்தி ஊர் பொதுமக்கள் சார்பில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்று திடீரென காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அந்த கிராமத்தில் பரபரப்பு நிலவியது. இதைத்தொடர்ந்து, கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன், கிராம நிர்வாக அலுவலர் சத்தியராஜ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சமாதான கூட்டம் நடத்தப்பட்டு, தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!