Old Student Donate Things To School கோவில்பட்டி அரசுப் பள்ளிக்கு ரூ. 5 லட்சம் மதிப்பில் பொருட்கள் வழங்கிய முன்னாள் மாணவர்

Old Student Donate Things To School  கோவில்பட்டி அரசுப் பள்ளிக்கு ரூ. 5 லட்சம் மதிப்பில் பொருட்கள் வழங்கிய முன்னாள் மாணவர்
X

கோவில்பட்டி அரசுப் பள்ளிக்கு முன்னாள் மாணவர் பொன்னுசாமி பொருட்கள் வழங்கினார்.

Old Student Donate Things To School 100 ஆண்டைக் கடந்த கோவில்பட்டி வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு முன்னாள் மாணவர் ஒருவர் தனது சொந்த செலவில் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொருட்களை வழங்கினார்.

Old Student Donate Things To School

100 ஆண்டை கடந்த கோவில்பட்டி வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு முன்னாள் மாணவர் ஒருவர் தனது சொந்த செலவில் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொருட்களை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 100 ஆண்டுகளை கடந்து இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 6 முதல் 12 வரை 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த 50 வருடங்களுக்கு முன்பு பயின்ற பொன்னுச்சாமி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற பள்ளி நூற்றாண்டு விழாவில் பங்கேற்றார்.

அப்பொழுது தான் பயின்ற பள்ளிக்கு ஏதாவது செய்ய விரும்புவதாகவும், என்ன வேண்டும் என்றும் அங்குள்ள தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் கேட்டு அறிந்தார். அவர்கள் மாணவர்களுக்கு போதிய மேஜை நாற்காலிகள் இல்லாமல் இருப்பதாகவும் அதை நிறைவேற்றித் தரும்படியும் கேட்டுக் கொண்டனர்.

அதனை ஏற்றுக் கொண்ட பொன்னுசாமி தனது சொந்த பணத்தில் இருந்து சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 75 ஜோடி மேஜை நாற்காலிகளை பள்ளிக்கு வழங்கினார். இதனை பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் பெற்றுக்கொண்டனர். இதற்கான நிகழ்ச்சியில் திரளான மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

தான் பயின்ற பள்ளிக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற நிலையில், தான் தற்போது ஓரளவு வசதியுடன் இருப்பதால் இந்த பொருட்களை பள்ளி மாணவர்களின் பயன்பாட்டுக்கு வாங்கிக் கொடுத்ததாக முன்னாள் மாணவரான பொன்னுசாமி தெரிவித்தார்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு