கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது
X

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாமஸ் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்துள்ளது.

இதையெடுத்து கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாதவராஜா தலைமையினால் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்த போது, கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்த அதே பகுதியை சேர்;ந்த கிருஷ்ணசாமி மகன் சுபாஷ்(21), சங்கர் மகன் முதீஸ்(18) ஆகிய 2 பேரையும் கைது செய்து 370கிராம் மதிப்புள்ள 72 கஞ்சா பாக்கெட்களை பறிமுதல் செய்தனர். விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
ai solutions for small business