கோவில்பட்டி அரசு கல்லூரி மகளிர் விடுதியில் ஆட்சியர் லட்சுமிபதி திடீர் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு கலை மற்றும் கல்லூரி மகளிர் விடுதியில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளம் வாக்காளர்கள் பெயர் சேர்த்தல் விழிப்புணர்வு முகாம் மற்றும் தேர்தலில் நாம் வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்தும் மாணவ, மாணவிகளுடலான கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் நிர்மலா தலைமை வகித்தார். இதில், சிறப்பு விருந்தினராக மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி பங்கேற்று பேசினார். அவர் பேசும்போது, 18 வயது நிரம்பிய ஆண், பெண் இரு பாலரும் நாம் வாக்களிப்பதற்கான அவசியம் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும், 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர் அடையாள அட்டை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
இதற்கிடையே, கல்லூரியின் பின்புறம் ஆண், பெண், இரு பாலருக்கும் கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 5.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விடுதி கட்டப்படுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பாக மகளிர் விடுதி திறக்கபட்டது தொடர்பாகவும், 153 மாணவிகள் தங்கி பயிலும் வகையில் விடுதி அமைக்கப்பட்டது. ஆனால் 20 மாணவிகள் மட்டுமே அங்கு தங்கி பயின்று வந்தனர். வெறும் 20 மாணவிகளைக் கொண்டு விடுதியை நடத்த முடியாத காரணத்தினால் மகளிர் விடுதி நீண்ட காலமாக பூட்டியே கிடக்கிறது என புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி திடீரென மகளிர் விடுதியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு புதர் மண்டி செடிகள் வளர்ந்தும் வேலி மரங்கள் முளைத்தும், பறவைகளின் புகலிடம் ஆகவும், விஷ பூச்சிகள் உள்ளே நடமாட்டமும் அதிகமாக காணப்பட்டு பாழடைந்த கட்டிடமாக காட்சியளித்ததை கண்டு மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அங்கு இருந்த கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய், வட்டாட்சியர் லெனின் ஆகியோரிடம் இந்தக் கட்டிடத்தை வேறு ஏதேனும் பயன்பாட்டிற்கு கொண்டுவர முடியுமா? அல்லது மாணவிகளின் வருகையை அதிகப்படுத்தி அவர்களுக்கு முறையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தர முடியுமா? என கேட்டறிந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu