கோவில்பட்டி அருகே வாகன விபத்தில் சிக்கிய பெண்களை மீட்ட எம்எல்ஏ

கோவில்பட்டி அருகே வாகன விபத்தில் சிக்கிய பெண்களை மீட்ட எம்எல்ஏ
X

பிள்ளையார்நத்தத்தில் நடந்த வாகன விபத்தில் சிக்கிய பெண்களை மார்க்கண்டேயன் எம்எல்ஏ மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

பிள்ளையார்நத்தத்தில் நடந்த வாகன விபத்தில் சிக்கிய பெண்களை மார்க்கண்டேயன் எம்எல்ஏ மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

கோவில்பட்டியிலிருந்து இருசக்கர வாகனத்தில் விளாத்திகுளம் நோக்கி வந்த இரு பெண்கள் பிள்ளையார்நத்தம் கிராமம் அருகே வந்தபோது நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அப்போது அந்த வழியாக வந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் விரைந்து சென்று அந்தப் பெண்களை மீட்டு, முதலுதவி சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு தனது வாகனத்தில் அனுப்பி வைத்தார்.

அத்துடன் அரசு மருத்துவமனை மருத்துவரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு இரு பெண்களுக்கும் உரிய சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். விளாத்திகுளம், பிள்ளையார்நத்தம் பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அந்த இடத்தை பார்வையிட்டு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, சாலையின் இருபுறமும் சரல்மண் அடிப்பதற்கும், வேகத்தடை அமைப்பதற்கும், உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!