கொளுத்தும் வெயிலில் அமைச்சர் வாக்கு சேகரிப்பு

கொளுத்தும் வெயிலில் அமைச்சர் வாக்கு சேகரிப்பு
X

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் 3வது முறையாக போட்டியிடும் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வீடு,வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 3வது முறையாக அதிமுக சார்பில் களம் காணும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று கோவில்பட்டி நகரில் உள்ள ஜில்விலாஸ் பகுதி, ஏகேஎஸ் தியேட்டர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

கொளுத்தும் வெயிலிலும் வீடு,வீடாக சென்ற அமைச்சர் கடந்த 10 ஆண்டுகளாக கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் தான் மேற்க்கொண்ட பணிகள் மற்றும் 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார். மேலும் திறந்த வெளி ஜீப்பில் வீதிவீதியாக சென்று அமைச்சர் வாக்கு சேகரித்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!