தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும்: அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
கோவில்பட்டி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் வீடுகளை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் தெற்கு இலந்தைகுளம் ஊராட்சிக்குட்பட்ட மானங்காத்தான் கிராமத்தில், கனிமொழி எம்.பியின் முயற்சியால், NTT Global Data Centers & Cloud Infrastructure India Private Limited, Chennai. (என்டிடி குளோபல் டேட்டா மையங்கள் & கிளவுட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இந்தியா பிரைவேட் லிமிடெட்,சென்னை) தனியார் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ. 80 லட்சம் மதிப்பில், பழுதடைந்த 20 காலனி வீடுகளை இடித்து, புது வீடுகள் கட்டும் கட்டுமான பணிகள் நடைபெற்றது.
இதில், பணிகள் நிறைவுபெற்ற 9 வீடுகளைக் கனிமொழி எம்.பி பயன்பாட்டிற்கு இன்று (24/10/2023) திறந்து வைத்து பேசினார். தொடர்ந்து, குத்துவிளக்கேற்றிய சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது:
கடந்த முறை நமது மானங்காத்தான் கிராமத்தில் நமது நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கட்டிமுடிக்கப்பட்ட பேருந்து நிறுத்தை திறந்து வைப்பதற்க்காக நாடாளுமன்ற உறுப்பினர் வந்தபோது நீங்கள்; எங்களுடைய குடியிருப்பு வீடுகள் பழுதடைந்துள்ளது அதை நீங்கள் சரி செய்து தர வேண்டுமென்று கோரிக்கை வைத்தீர்கள்.
நாங்கள் உடனடியாக உங்கள் கிராமத்திற்கு வருகை தந்து பார்வையிட்டு ஆய்வு செய்தோம். அப்பொழுது உடனடியாக அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்;கொள்ள வேண்டுமென்ற அடிப்படையில் நமது தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் தனியார் நிறுவனங்களிடம் பேசி சமூக பொறுப்பு நிதியினை பெற்று இந்த வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த குடியிருப்புகள் பயனாளிகளின் வசதிக்கு ஏற்ப செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது முதற்கட்டமாக 9 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 11 வீடுகளுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால் உங்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து உங்களுடைய நிலைகளை அறிந்து உங்களுடைய கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய வேண்டுமென்ற அடிப்படையில் தனியார் நிறுவனத்திடம் பேசி அந்த நிதியை மானங்காத்தான் ஊருக்கு வாங்கி தந்திருக்கிறார்கள்.
சென்னையில் உள்ள பெரிய பெரிய நிறுவனங்களிடம் நிதியை பெற்று இன்றைக்கு அந்த நிதியின் மூலம் நல்ல தரமாக குடியிருப்புகளை கட்டிதந்திருக்கிறார்கள். ஆகவே இந்த ஏற்பாடுகளை செய்து தந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு மக்கள் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
உங்களுடைய கோரிக்கையை யாரு எவர் என்று பார்க்காமல் என் தொகுதி மக்கள் ஆகையால் நான் அதை செய்து கொடுக்கவேண்டுமென்ற நோக்கத்தோடு செய்து தந்துள்ளார்கள். அடுத்த அந்த 11 வீடுகள் முடியும் போது அதையும் நாடாளுமன்ற உறுப்பினர் தொடங்கி வைப்பார்கள் என்பதை நான் உங்களிடம் கூறிக்கொள்கிறேன்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பித்து உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் மேல் முறையீடு கொடுக்கலாம். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நேரடியாக கள ஆய்வு செய்வார்கள். தற்பொழுது மனுவாக நமது நாடாளுமன்ற உறுப்பினரிடம் கொடுத்தால் கூட அது நிச்சயமாக உடனடியாக விசாரிக்கப்படும்.
உங்கள் பெயர் விலாசம் கொடுத்தால் கூட நாம் அதை சரிசெய்து விடலாம். தகுதியான அனைத்து மகளிர்களும் பயன் பெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனால் நிச்சயமாக தகுதியுள்ள அனைத்து மகளிர்களும் பயன் பெறுவீர்கள். அதற்காக நீங்கள் பதற்றம் அடைய வேண்டாம். கலக்கமடைய வேண்டாம். அதை போல் சில பேருக்கு உங்களை பற்றிய தகவல்கள் இல்லை என்று வந்திருக்கிறது. அப்படி வந்திருக்ககூடிய நபர்கள் உங்களுடைய விபரங்களை சமந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில் கொடுத்தால் போதும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu