குடிநீர் பிரச்னைகளுக்கு, தீர்வு காண புது யோசனை சொன்ன அமைச்சர் கீதாஜீவன்
கோவில்பட்டி நகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சி அலுவலக கூட்டரங்கில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் தொடர்பான ஆய்வுக் கூட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கீதாஜீவன் பேசியதாவது:
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மட்டுமல்லாமல், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அனைவரும் இணைந்து குடிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். ஊராட்சி மன்ற தலைவர்கள் குடிநீர் பிரச்சனை தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இலுப்பையூரணி, மீனாட்சிபுரம், கொடுக்காம்பாறை, சிவந்திபட்டி, முடுக்குமீண்டான்பட்டி, ஈராச்சி, பாண்டவர்மங்கலம், இனாம்மணியாச்சி, ஆவல்நத்தம், கிழவிபட்டி ஆகிய ஊராட்சிக்குட்பட்ட குக்கிராமங்களுக்கு கூட்டு;க்குடிநீர் திட்ட அளவுகளின்படி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இனாம்மணியாச்சி, லிங்கம்பட்டி, வரதராஜபுரம், உசிலம்பட்டி, கட்டாலங்குளம் பகுதிகளில் குடிநீர் பிரச்னை விரைவில் சரிசெய்யப்படும். அதிகாரிகள் மட்டுமல்லாமல் மக்கள் பிரதிநிதிகளும் சேர்ந்து குடிநீர் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாத வகையில் சரி செய்திட வேண்டும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கீதாஜீவன் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்ததாவது:
குடிநீர் பிரச்னை தொடர்பான பணிகளை தினமும் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான பணிகளுக்கு உடனடியாக அரசின் ஒப்புதல் பெறப்பட்டு பணிகளை தொடங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் விடுபட்ட பயனாளிகளுக்கு மறுவிண்ணப்பங்கள் செய்யப்பட்டு வருவதை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார். கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டிபாய், கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சந்திரசேகர், கோவில்பட்டி வட்டாட்சியர் லெனின், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள், ஊராட்சி செயலர்கள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu