மகளிர் உரிமைத் தொகை: அமைச்சர் கீதாஜீவன் புதிய அறிவிப்பு!
கோவில்பட்டி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வைப்பாற்றின் குறுக்கே உருளைகுடி ஊராட்சி பீக்கிலிபட்டி கிராம முதல் சங்கராபுரம் கிராமம் வரை தூத்துக்குடி விருதுநகர் உள்ளிட்ட மாவட்டத்தை இணைக்கும் வகையில் திருநெல்வேலி நபார்டு நெடுஞ்சாலை கிராமப்புற சாலை திட்டத்தின் கீழ் ரூ. 6.27 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாலம் அமைக்கும் பணியை கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில், அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:
தற்போது ரூ. 6.27 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் உயர் மட்ட பாலம் மூலம் 20 கிராம மக்கள் பயன் பெற உள்ளனர். தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய இரண்டு மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி உள்ளோம். மகளிர் உரிமை துறைக்காக விண்ணபித்தவர்கள் பதிவேற்றதின் பொது சிறு சிறு பிழை ஏற்பட்டு உள்ளதால் தான் சிலருக்கு கிடைக்க பெறாமல் உள்ளது.
அந்த பிழை சரி செய்யபட்டு வருகிறது. மகளிர் உரிமை தொகை பரிசீலனையில் உள்ளவர்கள் மனு, கள ஆய்வில் உள்ளவர்கள் காத்திருக்கலாம். அவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை நிச்சயமாக கிடைக்கும் என அமைச்சர் கீதா ஜீவன் பேசினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட கவுன்சிலர்கள் தங்க மாரியம்மாள், தமிழ்ச்செல்வன், திமுக ஒன்றிய செயலாளர்கள், சாத்தூர் ஒன்றிய பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu