ஆள்மாறாட்டம் செய்து 18 லட்சம் மதிப்புள்ள நிலம் மாேசடி: 3 பேர் கைது
நில மாேசடி புகாரில் கைது செய்யப்பட்ட பெருமாள், மயில்வாகணன், ஜேசுமணி.
எட்டயாபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட ஆத்திக்கிணறு கிராமத்தில் ஆள்மாறாட்டம் செய்து போலியாக பொது அதிகாரப் பத்திரம் எழுதி அதன் மூலம் கிரையப்பத்திரம் பதிவு செய்து 18 லட்சம் மதிப்புள்ள 2 ஏக்கர் 90 செண்ட் நிலத்தை மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயாபுரம் தாலுகா, லக்கம்மாள் தேவிபுரத்தைச் சேர்ந்த முத்துசாமி மணியம் மகன் முத்துசாமி (72) என்பவருக்கு பாத்தியப்பட்ட ஆத்திக்கிணறு கிராமத்தில் உள்ள 2 ஏக்கர் 90 செண்ட் நிலத்தை, மதுரை துரைச்சாமி நகர், அஸ்வின் தெருவைச் சேர்ந்த தொந்தி என்பவரது மகன் பெருமாள் (54), தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் விஐபி கோல்டன் நகரைச் சேர்ந்த செல்லப்பா மகன் மயில்வாகணன் (47), எட்டயாபுரம், ஆத்திக்கிணறு காலணித் தெருவைச் சேர்ந்த முத்துசாமி மகன் ஜேசுமணி (60) மற்றும் சிலரும் சேர்ந்து முத்துசாமியின் மேற்படி நிலத்தை அபகரிக்க வேண்டும் என்று கூட்டுச் சதி செய்து, ஜேசுமணி என்பவர் முத்துசாமி என்ற பெயரில் போலி அடையாள அட்டை தயார் செய்து, அதனை உண்மைபோன்று பயன்படுத்தி மேற்படி நிலத்தை உரிமையாளர் முத்துசாமி பொது அதிகாரம் (General Power) எழுதிக் கொடுப்பது போல 13.07.2020 அன்று எட்டயாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் மயில்வாகணன் என்பவருக்கு போலியாக பொது அதிகாரப் பத்திரம் பதிவு செய்து கொடுத்துள்ளார். மேற்படி போலியாக பதிவு செய்யப்பட்ட பொது அதிகார ஆவணத்தை உண்மை போன்று பயன்படுத்தி மயில்வாகணன் என்பவர் 14.07.2020 அன்று அதே சார்பதிவாளர் அலுவலகத்தில் பெருமாள் என்பவருக்கு போலி கிரையப் பத்திரம் பதிவு செய்து கொடுத்துள்ளார்.
இதுகுறித்து மேற்படி சொத்தின் உரிமையாளர் முத்துசாமி என்பவர் கொடுத்த புகாரின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், தூத்துக்குடி நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு (பொறுப்பு) மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராமிடம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்மந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் தூத்துக்குடி நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தேவி, உதவி ஆய்வாளர்கள் காமராஜ், விஜயகுமார், நாராயணன், சரவண சங்கர், தலைமைக் காவலர் தாமஸ் மற்றும் சித்திரவேல் ஆகியோர் அடங்கிய போலீசார் விசாரணை மேற்கொண்டு 31.08.2021 அன்று வழக்குப்பதிவு செய்து சம்மந்தப்பட்டவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் மேற்படி மோசடி செயலில் ஈடுபட்ட பெருமாள் என்பவரை மதுரையிலும், மயில்வாகணன் என்பவரை போடிநாயக்கனூரிலும் மற்றும் ஜேசுமணி என்பவரை எட்டயாபுரம் ஆத்திக்கிணறு பகுதியிலும் போலீசார் இன்று கைது செய்தனர். மேலும் இந்த மோசடி செயலில் சம்மந்தப்பட்ட மற்ற எதிரிகளையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu