சாகித்ய பால புரஷ்கர் விருது பெற்ற எழுத்தாளர் உதயசங்கருக்கு பாராட்டு
எழுத்தாளர் உதயசங்கருக்கு பாராட்டு தெரிவித்த கோவில்பட்டி மகிழ்வோர் மன்ற நிர்வாகிகள்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் மகிழ்வோர் மன்றத்தின் சார்பில் மாதம்தோறும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கூட்டத்திலும் பேச்சாளர் ஒருவர் அழைக்கப்பட்டு அவர் நகைச்சுவையாக ஏதேனும் ஒரு தலைப்பில் பேசுவது உண்டு.
அதன்படி, கோவில்பட்டி மகிழ்வோர் மன்றத்தின் 68 ஆவது மாதாந்திர கூட்டம் கோவில்பட்டி என்.கே மகாலில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு கழுகுமலை திருவள்ளுவர் மன்ற தலைவர் பொன்ராஜ் பாண்டியன் தலைமை வகித்தார்.
கோவில்பட்டி பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன் முன்னிலை வகித்தார். மகிழ்வோர் மன்ற காப்பாளர் மோகன்ராஜ் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியின்போது, சாகித்ய பாலபுரஷ்கர் விருதுக்கு தேர்வாகி உள்ள கோவில்பட்டி எழுத்தாளர் உதயசங்கரை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது. கூட்டத்தில், கவிஞர் சிவானந்தம் எழுதிய நிலா நிலா என்ற நூலினை ஆசிரியர் ராதா மதிப்புரை வழங்கினார்.
மதிப்புரை வழங்கிய ஆசிரியர் ராதாவிற்கும், நகைச்சுவை துணுக்குகள் வழங்கிய பள்ளி மாணவ மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. பட்டிமன்ற பேச்சாளர் திருச்சி நீலகண்டன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு எந்நாளும் இன்பமே என்ற தலைப்பில் மகிழ்வுரையாற்றினார்.
கூட்டத்தில் மன்ற இயக்குநர் ஜான் கணேஷ், மன்ற காப்பாளர்கள் செல்வின், துரைராஜ், ஆலோசகர் ஹரி கிருஷ்ணன், கோவில்பட்டி திருவள்ளுவர் மன்ற துணைத் தலைவர் திருமலை முத்துசாமி, கோவில்பட்டி கம்பன் கழக துணைத் தலைவர் ராஜாமணி, ரோட்டரி சங்க உறுப்பினர் நடராஜன், கழுகுமலை திருவள்ளூர் மன்ற செயலாளர் முருகன், உரத்த சிந்தனை வாசகர் வட்ட தலைவர் சிவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மகிழ்வோர் மன்ற காப்பாளர் சேர்மத்துரை நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu