கோவில்பட்டி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் நலத்திட்ட உதவி

கோவில்பட்டி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் நலத்திட்ட உதவி
X

கோவில்பட்டி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கோவில்பட்டி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கோவில்பட்டி ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கோவில்பட்டி சௌபாக்கியா மஹாலில் வைத்து நடைபெற்றது. விழாவில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, நோட்டு புத்தகம், பள்ளிகளுக்கு சோலார் விளக்கு வசதி, பள்ளிகளுக்கு குடிநீர் வசதி, அயன்பாக்ஸ் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் ரவி மாணிக்கம் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ், உதவி ஆளுநர் முத்துச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் மணிகண்ட மூர்த்தி ஆண்டறிக்கை வாசித்து அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில், ரோட்டரி சங்க தலைவராக வெங்கடேஷ், துணைத் தலைவராக சீனிவாசன், செயலாளராக சரவணன், இணைச் செயலாளராக ராஜமாணிக்கம், பொருளாளராக நாராயணசாமி ஆகியோருக்கு ரோட்டரி மாவட்ட ஆளுநர் முத்தையா பிள்ளை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பதவி பிரமாணம் செய்து வைத்து இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

கோவில்பட்டி ரோட்டரி சங்க புதிய உறுப்பினர்களுக்கு மாவட்ட முன்னாள் துணை ஆளுநர் ஆசியா பார்ம்ஸ் பாபு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட வெங்கடேஷ் ஏற்பரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ, நகர் மன்ற தலைவர் கருணாநிதி, ரோட்டரி மாவட்ட பொதுச் செயலாளர் ஆறுமுகப் பெருமாள், ரோட்டரி மாவட்டமுன்னாள் துணை ஆளுநர்கள் வி.எஸ்.பாபு, ஜெயப்பிரகாஷ் நாராயணசாமி,நகர் மன்ற உறுப்பினர் சீனிவாசன், முன்னாள் தலைவர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள்,பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ரோட்டரி சங்க செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.

Tags

Next Story