கோவில்பட்டி அருகே பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர்கள் மீது தாக்குதல்: 3 பேர் கைது

கோவில்பட்டி அருகே பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர்கள் மீது தாக்குதல்: 3 பேர் கைது
X

கோவில்பட்டி அருகே பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர்களை தாக்கியதாக கைது செய்யப்பட்டவர்கள்.

கோவில்பட்டி அருகே பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கீழநம்பியாபுரம் கிராமத்தில் இந்து தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளது. இந்தப் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக குருவம்மாள் என்பவரும், மேலும் சில ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை தலைமை ஆசிரியர் குருவம்மாள் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.

அந்த மாணவி தன்னை தலைமையாசிரியர் அடித்ததாக தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து, அந்த மாணவியின் பெற்றோர் மற்றும் அவர்களது உறவினர்களுடன் பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


பின்னர், அவர்கள் திடீரென பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியர் குருவம்மாள் மற்றும் இடைநிலை ஆசிரியர் பாரத் ஆகியோரை சரமாரியாக தாக்கினராம். இதனை அங்கு இருந்தவர்கள் தங்களது செல்போனில் படம்பிடித்து சமூக வலைதலங்களில் பதிவிட்டு உள்ளனர்.

இந்த வீடியோவை பார்த்த பலரும் ஆசிரியர் பள்ளிக்குள் புகுந்து தாக்கியவர்களையும், பள்ளி வகுப்பறைகளை சேதப்படுத்தியவர்களையும் கைது செய்து தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறைக்கு வலியுறுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக எட்டயபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே, ஆசிரியர்களை தாக்கிவிட்டு தப்பி ஓடியதாக மாணவியின் தந்தை சிவலிங்கம், தாய் செல்வி மற்றும் செல்வியின் தந்தை முனியசாமி ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது