தரையில் படுக்கும் நோயாளிகள்.. கோவில்பட்டி அரசு மருத்துவமனையின் அவல நிலை!

தரையில் படுக்கும் நோயாளிகள்.. கோவில்பட்டி அரசு மருத்துவமனையின் அவல நிலை!
X

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தரையில் அமர்ந்திருக்கும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள்.

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாததால் நோயாளிகள் தரையில் படுக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் பிரிவிலும். 500-க்கும் மேற்ப்பட்டோர் உள் நோயாளிகள் பிரிவிலும் தங்கிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளுக்குநாள் சிகிச்சைக்காக வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவில் போதிய படுக்கை வசதி இல்லாத நிலை உள்ளது.

குறிப்பாக ஆண்கள் மற்றும் பெண்கள் வார்டில் 60 படுக்கை வசதி தான் உள்ளது. ஆனால் 120 பேருக்கு மேலாக சிகிச்சைக்கு வரும் நிலை உள்ளதால் அனைவருக்கும் படுக்கை வசதி செய்து கொடுக்க முடியாத நிலை இருப்பதால் 50-க்கும் மேற்பட்டவர்கள் படுக்கை வசதி கிடைக்கமால் தரையில் படுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

அதிலும் பெரும்பாலானவர்கள் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளவர்கள் என்பது குறிப்பிட தக்கது. பெட் கிடைக்கவில்லை என்பதால் சிகிச்சை பெற வரும் நோயாளிகள் தரையிலும், மேலும் ஆண்கள் மற்றும் பெண்கள் வார்டு அருகே இருக்கும் செட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் வெயில், மழை என மாறி மாறி இயற்கை போக்குகாட்டி வருவதால் சிகிச்சை பெற வந்தவர்கள் பெட் கிடைக்கமால் அவதிப்பட்டு வருகின்றனர்.


மழை பெய்தால் ஓரத்தில் நிற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஏற்கெனவே மருத்துவமனை உள்ளே செயல்பட்டு வந்த மகப்பேறு பிரிவு தற்போது புதியதாக கட்டப்பட்டு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே பயன்படுத்திய கட்டிடங்கள் காலியாக உள்ளது. பெட் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அறுவை சிகிச்சைக்காக வருபவர்களுக்கு காலியாக உள்ள கட்டித்தினை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் அங்கு போதிய வசதி செய்து தர வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். போதிய படுக்கை வசதி இல்லை என்பதால் சிகிச்சை பெறுபவர்கள் தரையில் படுத்து அவதிப்பட்டு வருகின்றனர். அது மட்டுமல்லாது தரையில் படுத்து இருக்கும் நோயாளிகள் தாங்கள் வீட்டில் இருந்து கொண்டு வந்த துணிகளை விரித்து படுத்து தூங்கும் நிலை உள்ளது.

கடந்த 5 நாள்களுக்கு மேலாக போதிய படுக்கை வசதி இல்லமால் சிகிச்சை பெறுபவர்கள் அவதிப்பட்டு வருவதால் இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரது கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story
ai solutions for small business